Wednesday, September 18, 2013

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஏழை மக்களின் நலனுக்காகவே காங்கிரஸ் அரசு உழைப்பதாகவும், எதிர்கட்சியினர் பணக்காரர்களுக்காகவே உழைக்கிறது என்றும் , ஏழை மக்களுக்கு உதவி செய்யும் பணியை எதிர்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பரான் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து காங்,. துணைத்தலைவர் ராகுல்ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து ராகுல் பேசியதாவது: இந்தியாவில் தற்போது இரண்டு கட்டமைப்புகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒன்று அடிப்படை கட்டமைப்பும், ஏழைகளுக்கு உணவு வழங்குவதுமே. ஏழைகள் கனவை நிறைவேற்றவே காங்கிரஸ் அரசு கடுமையாக உழைக்கிறது. இவர்களது நிலைய உயர்த்தாமல் நாம் முன்னேற முடியாது. பா.ஜ,. பணக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டுள்ளது.


ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக காங் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கென 2 சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் எதிர்கட்சிகள் புதிய சட்டங்களை நிறைவேற்ற இடையூறாக இருந்து வருகிறது. ஏழை மக்கள் 2 நாட்கள் உழைத்தால் 2 நாட்கள் மருத்துவ செலவு செய்ய வேண்டிய கொடூர நிலையில் உள்ளனர். 

நாங்கள் ஏழைகள் விரும்பும் திட்டத்தை நிறைவேற்றுவோம். ஏழைகளுக்கென உழைக்கும் எங்கள் வழியை எதிர்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., பேசித்தான் வருகிறது. நாங்கள் பேச மாட்டோம், செயலாற்றி வருகிறோம். பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் என்னவென்று கூற முடியுமா ? இவ்வாறு ஆவேசமாக பேசினார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More