Wednesday, September 18, 2013

அவதூறு வழக்குகளுக்கு அஞ்சேன்: கோர்ட்டில் விஜயகாந்த் வீராப்பு!

தஞ்சை: எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கு நான் அஞ்சமாட்டேன், தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன் என தஞ்சை கோர்ட்டில் ஆஜரான தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்‌த் தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க. நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, குப்புசாமி என்பவர் அதே ஆண்டு டிசம்பரில் தஞ்சை முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கி்ற்காக நேரில் ஆஜராகுமாறு விஜயகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 7 முறை வாய்தா பெற்றார். தொடர்ந்து செப்டம்பர் மாதம் விஜயகாந்த்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால். இன்று காலை ஆஜரானார்.கோர்ட் வாசலில் காரை விட்டு இறங்கியதும் உற்சாகத்துடன் தொண்டர்களை பார்த்து இரு கைகளை மே‌லே தூக்கி, பெரிய கும்பிடு‌ போட்டார். வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சேதுமாதவன், வரும் நவ. 28-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். கோர்ட் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
வழக்குகளுக்கு அஞ்சமாட்டேன்
‌கோர்ட்டில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது, என்மீதும் எனது கட்சியினர் மீதும் இதுவரை 50 முதல் 60 அவதூறு வழக்குகள் தொடுத்துள்ளனர்.அத்த‌னையும் பொய் வழக்குகள். இதன் மூலம் ‌எனக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கினை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. வழக்குகளை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். தாது மணலுக்கு அரசு த‌டை விதித்துள்ளது தாமதமான முடிவு என்றார்.
Click Here

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More