Wednesday, September 18, 2013

நக்சல்கள் தாக்குதல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி: சி‌றைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களதுசகாக்களை விடுவிடுக்கும் வகையில் பயங்கரமான நடவடிக்கைகளில் நக்சல் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
சிறைகளில் நக்சல் இயக்கத்தினர்:


சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஓடிசா, மேற்குவங்கம், ஆந்திரா , மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. மேற்கண்ட ஒன்பது மாநிலங்களில் செயல்பட்டு வரும் நக்சல் இயக்கத்தினரை மாநில போலீசார் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நக்சல் இயக்கத்தின் முதுபெரும் தலைவராக கருதப்படும் முப்பல் லக்ஷமண ராவ் என்ற கணபதி மற்ற தலைவர்களுக்கு எழுதியுள்ள 17 பக்க கடித்ததை உளவு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நக்சல்களை விடுவிக்கப்பட்டனர். அத்‌த‌கைய தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்திட தயாராக இருக்க வேண்டும். மேலும் சிறைச்ச‌ாலைகளை புரட்சி கருத்துக்களை விதைக்கும் களமாக மாற்றும் படி அக்கடிதத்தி்ல் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மத்தியஅரசு எசசரிக்‌கை:


இக்கடித விவரம் குறித்து மத்திய அரசு மாநிலஅரசுகளுக்கு தெரியப்படுத்தியதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
மேலும் நக்சல் இயக்கத்தினர் எந்தவிதமான முறைகளையும் பின்பற்றி தங்களது சகாக்களை விடுவி்க்க முனைவதால் மாநில அரசுகள் போது மான பாதுகாப்புடன் விழிப்புடன் இருந்து சிறைகளை பலப்படுத்தும் நடவடிக்கை‌யை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More