Monday, May 20, 2013

பெயரைக் கெடுத்து விட்டார், ஸ்ரீசாந்த்தை கடுமையாக தண்டியுங்கள்...கேரளாவில் கொந்தளிப்பு

கொச்சி: கேரளாவின் பெயரைக் கெடுத்து விட்டார் ஸ்ரீசாந்த். அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் குமுறலுடன் கூறியுள்ளனர். கேரளாவிலிருந்து தேசிய அளவில் பிரபலமான முதல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தான். இதனால் கேரள மக்கள் அவரைக் கொண்டாடி வந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. ஸ்ரீசாந்த்தால் கேரளாவின் பெயர் கெட்டுப் போய் விட்டதாக அவரது மலையாள ரசிகர்கள் குமுறுகின்றனர். ஸ்ரீசாந்த்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் உரத்த குரலில் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More