]கதறி அழும் பக்தர்களும் கண்டுகொள்ளாத அப்துல் காதீர் ஜீலானியும்.
என்னை தனிமையில் 1000 முறை அழைத்தால் நான் ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்வேன் என்று முஹையத்தீன் மவ்லூதில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அவரது பக்த கோடிகள் பல்லாயிரக்கணக்கானோர் அழைத்தும். ஆஜர் ஆகமல் இருக்கும் அந்த நல்லடியார்.
மனிதர்களுக்கு மறைவாக வந்து எல்லா தேவையையும் பூர்த்தி செய்வார் என்று மக்கள் நம்பும் போது. இவரால் இவருடைய கோயில் எரிந்து சாம்பல் ஆகும்போது கூட அதை தற்காத்துக்கொள்ள முடியாத பரிதாப நிலை.
எல்லா நல்லடியார் பிடரியிலும் இவரது கால் இருக்கிறது. அப்படிபட்ட ஆழுமையும் சக்தியும் கொண்ட இந்த நல்லடியார் தனது தர்காவைக்கூட காப்பற்றிக்கொள்ள சக்தியற்றவராக இங்கு பரிதபப்படும் நிலையில் இருக்கிறார்.
காஸ்மீர் ம நிலத்தில் உள்ள இவரது 200 வருட பழமை வாய்ந்த தர்கா எரிந்து நாசம். பல பக்த கோடிகளுக்கு பலத்த காயம்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று இவர் நமக்கு அறிவிக்க வேண்டாம் இவரை நம்பி அங்கு தவம் கிடந்த அவரது பக்தர்களையாவது இவர் காத்திருக்க வேண்டாம?
அட் லீஸ்ட் ஒரு சிக்னல் கொடுத்திருக்க கூடாதா?
நம்ம உமரு புலவர் தனது கட்டுக்கதையில் 7 கடலையும் கடுகு ல் புகுத்தி விளையாட வந்தீர் என்று புகழ் பாடி இருக்கும்போது. இந்த மகான் தனது கோயிலை காத்துக்கொள்ள கூட முடியாமல் இருப்பது . ஏன்?????
வானம் பூமி இவை அனைத்தையும் இவர் பந்து போல சுருட்டி விளையாடுவதாக இருக்கு புகழ் மாலை எழுதிவைத்துவிட்டு இப்படி மக்களை ஏமாற்றி விட்டார் இந்த நல்லடியார்.
உலகத்தில் எந்த நல்லடியார் மீது இவருக்கு கட்டப்பட்ட கட்டுக்கதை போல கட்டப்பட்டதில்லை.
பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் கூட அந்த பெண் அல்லாஹ் என்று சொன்னால் யா முஹையதீன் என்று சொல்ல சொல்லும் அளவுக்கு இவர் மோல் ஒரு குருட்டு பக்தி.





0 comments:
Post a Comment