டிவி சீரியலில் மூழ்கியதால்'குழந்தை பலி.
நேற்று முன்தினம் மாலை, குழந்தை கோகுலை, தன் தங்கை ராஜலட்சுமியிடம் ஒப்படைத்து விட்டு,மனைவியுடன் ராஜேஷ் வெளியே சென்றார். இரவு 8.30 மணிக்கு, ராஜலட்சுமி, வீட்டில் மெய்மறந்து, "டிவி சீரியல்' பார்த்துக் கொண்டிருந்தார்.
இடைவேளையின்போது, குழந்தையை தேடினார். அக்கம் பக்கத்தில் விசாரித்தார். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. விவரம் அந்த பகுதியில் பரவியது.
அனைவரும் குழந்தையை, சுற்றுவட்டாரப் பகுதியில் தேடினர். இறுதியில், ஆர்.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இரவு முழுவதும் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, வீட்டின் பின்புறம் இருந்த கால்வாயில், குழந்தை கோகுல் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது.





0 comments:
Post a Comment