Thursday, June 28, 2012

கிழியும் மோடியின் கோரமுகம்!

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்;கிழியும் மோடியின் கோரமுகம்!

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கும் நரமோடிக்கும் தொடர்பில்லை எனக் காட்டுவதற்காக சங்பரிவார சக்திகள் என்னதான் பகீரத முயற்சிகள் மேற்கொண்டாலும் உலக நடுநிலையாளர்கள் மத்தியில் மோடியின் ரத்தக்கறை மறையவில்லை என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.அந்த வரிசையில், உலக பயங்கரவாத சிந்தனை கொண்ட ஆட்சியாளரையுடைய அமெரிக்காவில் மோடி எனும் பயங்கரவாதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

குஜராத் வன்முறைச் சம்பவங்களின் 10-வது ஆண்டுதினத்தையடுத்து, குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியுயார்க்கில் 40 இந்திய- அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் மன்ஹாட்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே சனிக்கிழமையன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே மோடியின் அமெரிக்க விஜயத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா விசா மறுத்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்கா மட்டுமன்றி உலக அளவில் மோடியின் கோர முகத்தை வெளிக்காட்டியிருக்கும் தானே!

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More