அல் ஹூமஸ்ஸா - புறம்பேசித்திரிதல்
1. (பிறரைக்) குறைகூறி புறம்பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
2. இத்தகைய்வன் பொருளைச் சேகரித்து அதனை எண்ணிவைத்துக்கொண்டும் இருந்தான்.
3. நிச்சயமாக, தன் பொருள தன்னை (என்றென்றும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.
4. (பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவனை நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணியிருந்தானே ) அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக!) ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
5. (நபியே!) "ஹுதமா" என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
6. ஏரிக்கப்பட்டுக்கொண்டிருக்க
7. அது எத்தகையதென்றால், (தேகத்தில் பட்டவுடன்) இதயங்கள் மீது சென்றடையும் (காரணம் இதயங்கள் தான் தீய கொள்கைகளுக்கு இருப்பிடமாக இருந்தது).
8. நிச்சயமாக அது, அவர்களின் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாய் இருக்கும்.
9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டிருப்பார்கள் ).





0 comments:
Post a Comment