Tuesday, May 29, 2012

குழந்தைகளை பிடித்து ஆட்டும் ஃபேஸ்புக் மானியா?



சோஷியல் மீடியா பற்றி சுவையான செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கையில், இதய துடிப்பையே நிறுத்துவது போல ஒரு புதிய செய்தியும் முளைத்து இருக்கிறது. எப்பொழுதும் ஃபேஸ்புக், எங்கேயும் ஃபேஸ்புக் என்று பயன்படுத்தும் குழந்தைகள் மன ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஃபேஸ்புக் எல்லோரையும் ஃபேஸ்புக் அடிமையாக மாற்றுவதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் மூலம் நிறைய தகவல்கள் பரிமாறப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் மனநல நிபுணர்கள் கூறுவதை பார்த்தால் ஃபேஸ்புக்கிற்கு இன்னொரு முகமும் இருப்பதாக தெரிகிறது.

எந்த நேரமும் ஃபேஸ்புகே கதி என்று உட்கார்ந்து இருப்பவர்கள் இது போன்ற மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இப்பொழுதெல்லாம் ஃபேஸ்புக் பெரியவர்களை விட சிறியவர்களால் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஃபேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதை ஃபேஸ்புக் மானியா என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோஷியல் மீடியா போன்ற எந்த ஒரு விஷயங்களையும் தேவைக்கு பயன்படுத்தும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் போது அதன் விபரீதங்கள் அதிகமாகவே இருக்கின்றது.
இதனால் தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக்கை தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துவது நல்லது.

ஃபேஸ்புக் குழந்தைகளின் மனதை பெரும் அளவில் மாற்றுகிறது என்ற இந்த விஷயம் சற்று திகிலை ஏற்படுத்துவதாக தான் உள்ளது. எனவே, பெற்றோர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தும் தங்களது குழந்தைகள் மீது ஒரு கண் வைப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More