பிரான்ஸ் அதிபர் தேர்தலில், பிரெஞ்சு வாக்குரிமை பெற்ற காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். இன்று காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். காரைக்காலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் 441 வாக்குகள் உள்ளன .
காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது





0 comments:
Post a Comment