ஆங்கிலேயர்களின் விளையாட்டான மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) குறித்து இன்னொரு ஆங்கிலேயரான ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில் "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் கைதட்டி ரசிக்கும் விளையாட்டு" என்றார். சர்வதேச சூதாட்ட கும்பலின் பிடியில் மட்டைப்பந்து வீரர்கள் இருப்பது உலகுக்குத் தெரியும்வரை ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் கிரிக்கெட் குறித்த விமர்சனத்தை யாரும் சீரியஸாக எடுக்கவில்லை.
மற்ற விளையாட்டுக்களை விடவும் மட்டைப் பந்தாட்டத்திற்கு கொடுக்கப்படும் அதீத ஊடக முக்கியத்துவத்தின் பின்னணியில் கருப்புப்பண முதலைகள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் சூதாட்டக்காரர்கள் இருப்பது தெரிந்த பிறகும், போட்டியில் வெற்றிபெற்றதற்கு நம்நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் மக்களவையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பது உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வெட்கக்கேடு. மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்தபோது கிரிக்கெட் நாட்டுப்பற்றின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது, பாகிஸ்தானுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை மட்டைப்பந்து மைதானத்தின் பார்வையாளர்கள் மாடத்தில் நடத்துமளவுக்கு தேசிய முக்கியத்துவம் பெற்றது!
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிகளை கிட்டத்தட்ட போராக கருதி இளைஞர்களிடையே தேசபக்த வெறியூட்டியதில் சங்பரிவாரங்கள் வெற்றி கண்டனர். மும்பை தாதா பால்தாக்கரேவுக்கு, தேசப்பற்று மிகைத்ததால் பாகிஸ்தானுடனான போட்டியைத் தடுப்பதற்காக மைதானத்தை (பூமித்தாயை?) கொத்திக் குதறியது மறக்க முடியா விடயம்.
மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வெல்லலாம். இலங்கை வெல்லலாம்; ஆனால் பாகிஸ்தான் எக்காரணம் கொண்டும் வெல்லக்கூடாது என்ற குரூரமனப்பான்மை சிலரிடம் குடிகொண்டுள்ளதற்கு இதைச்சுற்றி பின்னப்பட்டுள்ள சதித்திட்டமே காரணம். பாகிஸ்தானுடனான போட்டிகளின்போது பீறிட்டுக் கிளம்பும் தேசப்பற்று இலங்கை,ஆஸ்திரேலியா,தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடனான போட்டிகளின்போது காணாமல் போவதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
இந்தியர்களை அடித்து,உதைத்து, விரட்டியடித்த ஆஸ்திரேலியா, இந்தியாவுடனான போட்டிகளில் தோற்கவேண்டும் என்று எவரும் குரலெழுப்பாததன் மூலம், குறிப்பிட்ட மதம் சார்ந்த துவேசம் வளர்க்கவே கிரிக்கெட் விளையாட்டு பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது.மட்டைப் பந்தாட்டத்திற்கும் இந்தியாவுக்கும் துளியும் தொடர்பில்லை. நம்மை இருநூறாண்டுகள் அடிமையாக்கிச் சுரண்டிய ஆங்கிலேய அடக்குமுறை சின்னமே கிரிக்கெட்.
இந்தியாவின் வெற்றி-தோல்விக்கு ஓரிருவரே காரணம் என்பதுபோன்ற புனித பிம்பம் ஏற்படுத்தப்பட்டு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதை வழங்குவது குறித்து தேசியளவிலான விவாதம் எழுந்து அடங்கியது. இவிருதைப்பெறுவதற்கான நெறிமுறைகள் இருந்தபோதும் தனி ஒருவருக்காக அவற்றை மாற்றியமைக்க சிலர் பரிந்துரைத்தனர். மட்டைப்பந்தாட்ட வீரர்கள் எவரும் நாட்டுக்காக இலவசமாக விளையாடுவதில்லை. அவ்வாறு விளையாடிப்பெறும் கோடிக்கணக்கான ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கோ அல்லது தேசிய பேரிடர் நிதிக்கோ வழங்குவதில்லை. மட்டுமின்றி வெளிநாட்டுப் பரிசுப்பொருட்களுக்கு சுங்கவரிவிலக்கும் வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டின்போது காட்டப்படும் விளம்பரங்களுக்கும் போட்டிகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மைதானத்தில் குட்டைப் பாவாடையுடன் குமரிகளை ஆபாச நடனம் ஆடவைப்பது ஏனென்று விளங்கவில்லை. பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள், அரசு ஊழியர்களின் தேசியக் கடமைக்கான நேரங்களையும், பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களின் படிப்புகளையும் பாழாக்கி, அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நாள்விழுங்கி ஆடம்பர விளையாட்டான மட்டைப்பந்து போட்டிகள் தேசநலனுக்கு மட்டுமின்றி வெகுஜன/தனிநபர் முன்னேற்றத்திற்கும் எதிரானது.

எல்லை தாண்டிய தீவிரவாதம்பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் எல்லைதாண்டி வந்த ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எச்சங்களாக இந்தியர்களின் மனங்களில் புரையோடிவிட்ட மட்டைப்பந்து விளையாட்டு பற்றியும் பேசவேண்டும். உலக அரங்கில் நமது நாட்டின் வல்லரசு கனவை மேலும் சில ஆண்டுகள் தள்ளிப்போடுவதில் மட்டைப்பந்து விளையாடின்மீதான இளைஞர்களின் மோகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இது தேசநலனுக்கு எதிரான விளையாட்டே!

0 comments:
Post a Comment