தெற்கு சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அம்மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பவுல் மேனன் என்பவரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.
இதனால் அம்மாநிலம் பரபரப்படைந்துள்ளது. கடத்தலைத் தடுக்க முயன்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மெய்க்காப்பாளர்கள் இருவரை கடத்தல்காரர்கள் கொன்று போட்டுள்ளனர்.
கிராம மக்களிடம் அரசுத் திட்டங்கள் பற்றி ஆட்சித்தலைவர் விளக்கிக்கொண்டிருந்த போது, அதிரடியாக வந்த 90 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மெய்க்காப்பாளர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை மட்டும் கடத்திச் சென்றதாக மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியருடன் உடனிருந்த வட்டார துணை நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. வைத்யா என்பவரை கடத்தல்காரர்கள் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். நேற்று சனியன்று மாலை 04:30லிருந்து 05 மணிக்குள் இந்தக் கடத்தல் நிகழ்ந்துள்ளது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சந்தாலியா தலைமையில் காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங்கைத் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இவ்விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது என்று கூறி ஆறுதல் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment