Tuesday, April 24, 2012

இத்தாலி கப்பலைத் தடுத்து வைக்கும் அதிகாரம் - மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி கண்டனம் Read more about இத்தாலி கப்பலைத் தடுத்து வைக்கும் அதிகாரம் - மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி கண்டனம்


இத்தாலி கப்பலை தடுத்து வைக்கக் கூடிய அதிகாரம் கேரளாவுக்கு கிடையாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தற்கு கேரள முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரளாவில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாலி எண்ணெய் கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் இவர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரண்டு இத்தாலியர்களை கேரள அரசு கைது செய்ததுடன், கப்பலையும் தடுத்து வைத்துள்ளது.

இத்தாலி அரசு சார்பில் இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் தருமாறு மத்திய அரசு,கேரள அரசு மற்றும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம் மாநிலத்தின் கடல் எல்லையைத்தாண்டி இருப்பதால் கப்பலை தடுத்து வைக்கும் அதிகாரம் கேரள அரசுக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரமும் கேரளாவுக்கு இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் கமிட்டியின் கேரள பொறுப்பாளரான மதுசூதனனைச் சந்தித்து தனது கண்டத்தை தெரியப்படுத்தியதோடு, இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்குரைஞரான ராவல் இனிமேல் ஆஜராகக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடமும் இதனைத் தெரிவித்துள்ள உம்மன் சாண்டியிடம், சட்ட அமைச்சரிடம் தெரிவித்து  நடவடிக்கை எடுப்பதாக தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More