
எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி என பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தின் நிறுவனரும், அதிபருமான மறைந்த பி.நாகிரெட்டியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. இப்புதிய படத்தின் முறையான அறிவிப்பு விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். 2012ல் தொடங்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment