ப.சிதம்பரத்தைப் புறக்கணிப்பது பற்றியான முடிவை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் : பிரதமர்!

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தொடங்கியதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டன. இதனையடுத்து இருஅவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று(திங்கள்) மாலை பாஜக மூத்ததலைவர் தலைவர் அத்வானியின் வீட்டில் நடைபெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணிகளின் கூட்டத்தில், அரசை பல விதமான கேள்விகள் மூலம் திணறடிக்க திட்டம் தீட்டப்பட்டது. மேலும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் புறக்கணிப்பது பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் புறக்கணிப்பது பற்றியான முடிலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகொள் விடுத்துள்ளார். மேலும் கூட்டத் தொடர் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்தழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது எழுப்ப இருப்பதால், தொடர்ந்து குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 comments:
Post a Comment