Tuesday, November 22, 2011

குடிகாரர்களை சவுக்கால் அடிக்க வேண்டும் : அன்னா ஹசாரே


புதுடெல்லி: குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும், என்று அன்னா ஹசாரே கூறிய ஆலோசனைக்கு, பாஜக, காங்கிரஸ் போன்ற அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,' என் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில், குடிப்பவர்களை மூன்று முறை எச்சரித்த பின்பு, கோவிலுக்கு அழைத்துச் சென்று இனி குடிக்க மாட்டோம் என சத்தியம் செய்ய சொல்வார்கள். அதையும் மீறி குடித்தால், கோவிலுக்கு அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடிப்போம்' என்று கூறிய அவர், குடித்து விட்டு வீட்டையும், நாட்டையும் கெடுப்பதோடு, தங்கள் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்பவர்கள் நம் மக்கள். எனவே, அவர்களை சீர்திருத்துவதற்கு இதுதான் சிறந்த வழி என்றும் கூறினார்.

ஆனால் இதற்கு பல அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், அவ்வாறு தண்டிக்க வேண்டுமென்றால், இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை தண்டிக்க வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More