Sunday, November 13, 2011

பெட்ரோலிய பொருட்கள் விலை குறையாது: பிரணாப்

பெர்காம்போரே:""பெட்ரோலிய பொருட் களின் விலையை, மத்திய அரசு குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், குறிப்பிட்ட விலையில் எரிபொருட்களை விற்பதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பெருமளவு மானியம் வழங்கப்படுகிறது'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு போன்றவை, நாடு சந்தித்து வரும் முக்கியமான பிரச்னைகள். பட்ஜெட் போடும் நேரத்தில் நிலவும் விலையை விட, கூடுதல் விலைக்கு, பல நேரங்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.அன்னிய நாட்டு எண்ணெய் நிறுவனங்களும், அவ்வப்போது, விலையைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால், பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

மாநில அரசுகள், எப்போதும், மத்திய அரசின் கடனை சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.அத்தியாவசிப் பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்க, பொது வினியோகத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும். பலமான பொது வினியோக முறை இருந்தால், 40 கோடி மக்கள் பலன் அடைவர். இதன்மூலம், விலைவாசியைக் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, பிரணாப் முகர்ஜி கூறினார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More