தமிழகத்தில் ஆறு மின் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், மின்வெட்டு நேரம் ஐந்து மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு தினமும், 10 ஆயிரம் முதல் 11,500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் வழக்கமாக, 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது, காற்று வீசும் சீசன் குறைந்து, மழை மற்றும் பனிக்காலம் வந்ததால், காற்றாலை மின் உற்பத்தி, "ஜீரோ' நிலைக்கு வந்து விட்டது. காற்று வீசும் நிலைமைக்கு ஏற்ப, 10 மெகாவாட், 20 மெகாவாட் என, விருப்பம் போல் காற்றாலைகளில் உற்பத்தியாகிறது.நேற்று முன்தினம் அதிகாலையில், பூஜ்யம் மெகாவாட்டும், நேற்று காலையில், 10 மெகாவாட்டும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. அனல் மின் நிலையங்கள் மூலம், 2,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.
அதே நேரம், பல மின் நிலையங்களில், பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் கோளாறு காரணமாக ஒரு யூனிட்டும், வருடாந்திர பராமரிப்புக்காக, ஒரு யூனிட்டும் மூடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஊத்தங்கரையிலுள்ள தனியார் எஸ்.டி.சி.எம்.எஸ்., நிலையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து, 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குத்தாலம், பேசின்பிரிட்ஜ், வழுதூர் ஆகிய, காஸ் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றால் கூடுதலாக மொத்தம், 970 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க, வெளிச்சந்தையிலும், டெண்டர் மூலமும், 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீத தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கடந்த இரு தினங்களாக, சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற நகரங்களில் நான்கு மணி நேரமும், கிராமப் பகுதிகளில், ஐந்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், வழக்கமான மூன்று மணி நேரம் போக, கூடுதல் நேரத்திற்கு, சுழற்சி முறையில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்ற கணக்கில், மின்வெட்டு அமலாகிறது.
பழுதான நிலையங்கள் பாதிப்பு (மெகாவாட்)
தூத்துக்குடி- 2 யூனிட் 420
ஊத்தங்கரை (எஸ்.டி.சி.எம்.எஸ்.,) 250
குத்தாலம் 100
பேசின் பிரிட்ஜ் 120
வழுதூர் 80
மொத்தம் 970
தூத்துக்குடி- 2 யூனிட் 420
ஊத்தங்கரை (எஸ்.டி.சி.எம்.எஸ்.,) 250
குத்தாலம் 100
பேசின் பிரிட்ஜ் 120
வழுதூர் 80
மொத்தம் 970





0 comments:
Post a Comment