கோவை:லஞ்ச அதிகாரிகளை மாட்டி விடுவதற்காகத் தரப்படும் லஞ்சப்பணம், பல ஆண்டுகளாகியும் திரும்பக் கிடைக்காததால் லஞ்ச ஒழிப்புத்துறை மீதான மக்களின் நம்பிக்கை தளர்ந்து வருகிறது.
லஞ்சத்தை ஒழிப்பதாக அரசியல்வாதிகள் பலர், தேர்தல் நேரத்தில் ஆவேசமாக முழங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின், அதைப்பற்றி வாயே திறப்பதில்லை; சாலை பாதுகாப்பு வாரம் போல, லஞ்ச எதிர்ப்பு வாரம் அனுசரிக்க வேண்டிய நிலைக்கு, லஞ்சத்தின் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடும் மிக முக்கியக் காரணம்.பல இடங்களில் அரசு அலுவலர்களின் "மாமூல்' பட்டியலில், லஞ்ச ஒழிப்புத்துறையும் இடம் பிடித்து விடுவது கசப்பான உண்மை. அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்தவோ, அத்துறையின் நடைமுறைகளை எளிமைப்படுத்தவோ மத்திய, மாநில அரசுகளும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.லோக்பால், லோக் அயுக்தாவைப் பார்க்கும் பார்வையிலேயே, லஞ்ச ஒழிப்புத்துறையையும் ஆட்சியாளர்கள் பார்ப்பதே இதற்குக் காரணம். லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சம்மந்தப்பட்ட அலுவலரைக் கையும், கையூட்டுமாகப் பிடித்துத்தரும் மக்களுக்கு, அவர்களின் சொந்தப்பணத்தை விரைவாகத் திருப்பித் தருவதற்கு நடவடிக்கை எடுக்காமலிருப்பதும் இதன் வெளிப்பாடுதான்.
லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டது தொடர்பாக, நூற்றுக்கணக்கான வழக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோர்ட்களில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில், புகார்தாரரால் தரப்பட்ட லஞ்சப்பணம், முக்கிய சாட்சியாக இருப்பதால், பலருக்கு பத்தாண்டுகள் கழித்தும் கூட, லஞ்சமாகக் கொடுத்த பணம், திரும்பக் கிடைப்பதில்லை.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன், தகவல் உரிமைச் சட்டத்தில் வாங்கிய தகவல்களின்படி, கோவையில் மட்டும் 72 வழக்குகளில் புகார்தாரருக்கு லஞ்சப்பணம், திரும்பக் கிடைத்தபாடில்லை. அதிகபட்சமாக, ஒரு வழக்கில் 19 ஆண்டுகளாகியும் ஒரு புகார்தாரருக்கு லஞ்சப்பணம் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.லஞ்சமாகத் தரப்படும் பணத்தை விரைவாகத் திருப்பித்தர வேண்டுமென வலியுறுத்தி, இந்த அமைப்பு கடந்த 2007ல் ஐகோர்ட்டில் "ரிட் மனு' தாக்கல் செய்தது; அப்போது, லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்த பதிலில், "லஞ்சமாகத் தரப்பட்ட பணத்துக்கு இணையான தொகையை, அதற்குப்பதிலாக வழங்குவதற்கு ஏற்கனவே 1992லேயே அரசாணை உள்ளதாக' கூறியது.
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன், தகவல் உரிமைச் சட்டத்தில் வாங்கிய தகவல்களின்படி, கோவையில் மட்டும் 72 வழக்குகளில் புகார்தாரருக்கு லஞ்சப்பணம், திரும்பக் கிடைத்தபாடில்லை. அதிகபட்சமாக, ஒரு வழக்கில் 19 ஆண்டுகளாகியும் ஒரு புகார்தாரருக்கு லஞ்சப்பணம் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.லஞ்சமாகத் தரப்படும் பணத்தை விரைவாகத் திருப்பித்தர வேண்டுமென வலியுறுத்தி, இந்த அமைப்பு கடந்த 2007ல் ஐகோர்ட்டில் "ரிட் மனு' தாக்கல் செய்தது; அப்போது, லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்த பதிலில், "லஞ்சமாகத் தரப்பட்ட பணத்துக்கு இணையான தொகையை, அதற்குப்பதிலாக வழங்குவதற்கு ஏற்கனவே 1992லேயே அரசாணை உள்ளதாக' கூறியது.
அந்த அரசாணையின் எண், அதன் விபரத்தையும் ஆணையம் வழங்கியது; ஆனால், அதன்படி, இதுவரை எந்த வழக்கிலுமே பணம் திருப்பித் தரப்பட்டதாகத் தெரியவில்லை. ரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம், கோர்ட்டில் சாட்சி ஆவணமாகப் பதிவு செய்யப்பட்ட பின், புகார்தாரர் விண்ணப்பம் தந்த பின்பே, திருப்பித்தரப்படுகிறது.விண்ணப்பம் தந்தால்தான் பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுகூட, புகார்தாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இதனால், ஒரு பெரிய தொகையை லஞ்சமாகக்கொடுத்து, யாரையாவது மாட்டி விட்டாலும், அந்தப் பணம் எப்போது திரும்பக்கிடைக்குமோ என்ற எண்ணத்திலேயே பலர், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுக்க விரும்புவதில்லை.லஞ்சத்துக்கு எதிராகப் போராடுவோர்க்கு, இது மிகப்பெரும் சவாலாகவுள்ளது. ஏற்கனவே, ஓர் அரசு அலுவலரை மாட்டி விடுவதால், அவர் அத்துறையின் எதிரியாகி விடுகிறார்; தனது பணிகளை விட்டு விட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கும், கோர்ட்டுக்கும் பல நாட்கள் அவர் அலைய வேண்டியுள்ளது; அத்தோடு, பணமும் கிடைக்க பல ஆண்டுகள் தாமதமாகி விடுகிறது.
எனவே, லஞ்சமாகத் தரப்பட்ட பணத்தை விரைவாகத் திரும்பக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ள பல ஆலோசனைகள், அரசால் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டியவையாகவுள்ளன.லஞ்சத்தின் போது பிடிபட்ட பணத்துக்கு இணையான தொகையை, அரசு உடனே வழங்க வேண்டும்; லஞ்சமாகத் தரப்பட்ட பணம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், அரசின் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்; இவ்வாறு செய்தால் மட்டுமே, லஞ்சத்துக்கு எதிராகப் போராட மேலும் பலர் முன் வருவர் என்பதை அந்த கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.ஏற்கனவே ஒரு வழக்கில் லஞ்சமாக தரப்பட்ட பணம் விரைவாகத் திரும்பக் கிடைத்தால்தான், அந்த நபர் மீண்டும் ஒரு முறை, லஞ்ச ஒழிப்புத்துறையைக் கூப்பிட நினைப்பார். இல்லாவிட்டால், லஞ்சம் கேட்போரை மாட்டி விட யாருமே முன் வரமாட்டார்கள் என்பது நிச்சயம்; தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டுமெனில், முதலில் லஞ்சத்துக்கு முடிவு கட்டுவது மிகமிக முக்கியம்.





0 comments:
Post a Comment