Saturday, September 10, 2011

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

சென்னை: சென்னையில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவி வருகிறது.

'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பொதுவாக கோடை காலத்தில் தான் ஏற்படும். ஆனால் தற்போது, சென்னையில் வெயிலும் மழையும் என கலவையான தட்பவெப்பம் நிலவுவதால், மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிறுவர், சிறுமியர் இடையே இந்த நோய் அதிகளவில் பரவி வருகிறது.

மெட்ராஸ் ஐ நோய் வந்தால் கவனக்குறைவாக இருக்க கூடாது. தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More