லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை தோல்வியை தழுவியது, ரசிகர்களிடையே சோகத்தை அதிகரித்துள்ளது.இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மழை குறுக்கிட்டு ரத்தானது. 2வது போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை விளாசிய இங்கிலாந்து வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று 3வது போட்டி, கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர், இந்தியாவை பேட் செய்யுமாறு பணிந்தனர். இந்தியாவின் தொடக்கமே சரிவை சந்தித்தது. ஆண்டர்சனின் முதல் ஓவரிலேயே, ரகானே ரன் எதுவும் எடுக்காமல் பிரிவிலியன் திரும்பினார்.
அதன்பின் டிராவிட் 2 ரன்களில் திருப்திபட்டு கொண்டார். 19 பந்துகளை சந்தித்த பார்த்திவ் பட்டேலும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோஹ்லியும் 7 ரன்களில் வெளியேறினார். தொடர் சரிவில் சென்ற இந்திய அணியை மீட்க ரெய்னா சிறிது நேரம் போராடினார்.
அதன்பின் அவரும் 21 ரன்களில் ஆவுட்டாக, 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்தியா பரிதபித்தது. இந்த பெரும் சரிவை மீட்க, கேப்டன் டோனியும், ஜடேஜாவும் கடுமை போராடினார். அவர்களின் முயற்சியில், இந்தியாவின் நிலைமை மாறியது. நீண்டநேரம் களத்தில் இருந்த டோணி, 103 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு பின், பந்துவீச்சாளர் அஷ்வினும், ஜடோஜாவும் பவுண்டர்கள் வீளாசினார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 234 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 89 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தரப்பில் துவக்கமே அதிரடியாக இருந்தது. ஆனால், 34 பந்துகளில் 23 ரன்களை எடுத்த குக், முனாப்பிடம் எல்.பி.டபில்யூ முறையில் ஆவுட்டனார். கீஸ்வெட்டர், அரைசதம் கடந்து 51 ரன் எடுத்து ஜடேஜாவிடம் போல்டானார்.
டிராட் 11 ரன்களை எடுத்து அஷ்வினிடம் சிக்கினார். இந்நிலையில், மழைக் குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றியது. 43 ஓவர்களில் 218 ரன் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என மாற்றப்பட்டது.
இங்கிலாந்து தரப்பிலும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த போதிலும், 41.5 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து, 218 ரன் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.





0 comments:
Post a Comment