Tuesday, September 13, 2011

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கைதானதாக தமிழகம் முழுவதும் வதந்தி

மதுரை: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டதாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு திடீரென வதந்தி பரவியது. ஆனால் அழகிரி கைது செய்யப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடும், அதில் 7 தலித்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமுதாயத்தினர் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். காவல்துறையின் செய்கைக்கு அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் முதல்வர் ஜெயலலிதா மட்டும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். மேலும், நீதி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பரமக்குடி சம்பவம் காரணமாக, திமுகவினர் மீது நில அபகரிப்பு பரபரப்பு திசை திரும்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென மு.க.அழகிரி கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் திமுகவினர் பரபரப்படைந்தனர்.

இதையடுத்து அழகிரி வீட்டுக்கு தொலைபேசிகள் அழைப்புகள் வந்தன. ஆனால் அழகிரி கைது செய்யப்படவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More