பரமக்குடி : தூத்துக்குடியில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலை கலைக்க போலீசார் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். கல்வீச்சில் டிஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் குருபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தூத்துக்குடியில் இருந்து நேற்றுகாலை புறப்பட்டார். வழியில், கமுதி அருகே படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஜான்பாண்டியன் வருகை பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என போலீசார் கருதினர்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே ஜான்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் தெரிந்ததும், பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்து முனை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முடிவு எட்டப்படாததையடுத்து, கும்பலை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
பதிலுக்கு, போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், டிஐஜி சந்தீப் மித்தல், எஸ்.பி.செந்தில்வேலன், பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ் வாகனங்களும் கல்வீச்சில் சேதமடைந்தன. போலீசாரின் வஜ்ரா வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது. பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குள் புகுந்த கும்பல் பொருட்களை சூறையாடி, பெண் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியது. பாரதிநகரில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் நின்றிருந்த வேனுக்கும் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம், 2ஆம்புலன்ஸ்கள், சுகாதாரத்துறை அலுவலரின் ஜீப், ஆட்டோக்கள், 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பரமக்குடியை சேர்ந்த பாண்டி மகன் ஜெயபால்(29), திரவியம் மகன் பன்னீர்செல்வம், மற்றொருவர் ராமர் மகன் கணேசன். கும்பலை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால், அந்தப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது.
பரமக்குடி அருகே உள்ள சிக்கல், ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை, தொண்டி அருகே சம்பை, முதுகுளத்து£ர் உள்ளிட்ட பல இடங்களில் ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் 4 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. திருச்சி&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பரமக்குடி தாலுகாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தடியடியில் ஒருவர் பலி
இளையான்குடி : பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி, காட்டுப்பரமக்குடியை சேர்ந்த குமார்(26), மருந்தனூரை சேர்ந்த பாண்டி(30) உட்பட 9 பேர் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி தீர்ப்புக்கனி உயிரிழந்தார்.
ஜான்பாண்டியன் கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கீழையூர் பகுதியில் நேற்று மாலை அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி இளங்கோ அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கரக்குடியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிளஸ் 2 மாணவர் ஆனந்தனின் (16) வலது கையில் குண்டு பாய்ந்தது. இவர் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

0 comments:
Post a Comment