Wednesday, September 14, 2011

ஈராக்கில் 22 பயணிகளை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்ற மர்ம ஆசாமிகள்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள மேற்கு பாக்தாதில் சிரியாவில் இருந்து பேருந்தில் வந்த 22 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றனர்.

சிரியாவில் இருந்து 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள நௌகைர் பாலைவனத்தில் சென்றபோது ஆயுதம் ஏந்திய சிலர் பேருந்தை வழிமறித்தனர்.

ஆயுதங்களைப் பார்த்த பேருந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். உடனே அந்த மர்ம நபர்கள் பேருந்துக்குள் உள்ள அனைவரையும் கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டனர். ஆயுதங்களைப் பார்த்து பயந்துபோன அப்பாவி மக்கள் மறுபதில் சொல்லாமல் பேருந்தில் இருந்து இறங்கினர்.

இறங்கியவர்களை வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தங்கள் கைகளில் இருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக பயணிகளை நோக்கி சுட்டனர். இதில் 22 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More