Wednesday, September 14, 2011

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படைக் காடையர்கள் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கவே விடாமல் அட்டூழியம் செய்து வருகிறது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழக மீனவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தாக்க முயன்றனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பி வர முயன்றனர். அப்போது குறுக்கிட்ட சில படகுகளை நிறுத்திய இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் வலைகளை கிழித்து எறிந்தனர். பின்னர் மிரட்டி விரட்டினர்.

இதையடுத்து மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பினர். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீ்னவர்களிடையே கடும் கொதிப்பு நிலவுகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More