சென்னை: தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் அண்ணா பிறந்தநாளான வரும் 15-ம் தேதி துவங்கப்படுகிறது. இதனை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்குகிறது. இந்த ஆண்டு மட்டும் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ. 912 கோடி நிதி ஒதுக்கியது.
அண்ணா பிறந்தநாளான வரும் 15-ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளும் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்காக ரூ. 10, 200 கோடி செலவாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாகத் தான் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.
இந்த மடிக்கணினிகளை தமிழ்நாடு எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்) தான் வினியோகம் செய்கிறது. வரும் 15-ம் தேதி வழங்குவதற்காக ஹெச்.பி. மற்றும் ஏசர் நிறுவனங்கள் 4, 000 மற்றும் 2,000 மடிக்கணினிகளை வழங்கியுள்ளது.





0 comments:
Post a Comment