
போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், மாணவ, மாணவிகள் காரில் தனியாக இருந்ததை பார்த்து எச்சரித்து அனுப்பினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கடற்கரை ஓரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சாலைகளில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு தனியாக நிற்கும் கார் மீது சந்தேகம் வந்து கார் அருகே சென்றார்.
காருக்குள் உருவங்கள் தெரிந்தன. இதனால் காரை சுற்றி வளைத்தனர். அப்போது, காரின் முன் இருக்கையில் ஒரு ஜோடியும், பின் இருக்கையில் மற்றொரு ஜோடியும் இருந்தது. அவர்கள் காதல் ஜோடிகள் என்று தெரியவந்தது.
இரு ஜோடிகளும் அரை, குறை ஆடைகளில் இருந்தனர். விசாரணையில், இரு பெண்களுமே பிளஸ் 2 மாணவிகள். ஆண்களில் ஒருவர் கல்லூரி மாணவர், மற்றொருவர் பட்டதாரி வாலிபர்.
இதனால் மாணவிகளை எச்சரித்த போலீசார், உடனடியாக போலீஸ் வாகனத்தில் அவர்கள் வசிக்கும் பகுதி வரை அழைத்து சென்று, Ôஇனிமேல் இதுபோன்ற காரில் சுற்றுவது தெரியவந்தால், பெற்றோரிடம் சொல்வோம்Õ என்று எச்சரித்து அனுப்பினர்.
ஆனால், மாணவிகளுக்கு வயது 17 கூட ஆகவில்லை. ஆண்களில் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்று தெரியவந்தது.
அவர்கள் காதல் என்ற போர்வையில் இதுபோன்று மாணவிகளிடம் தவறாக நடப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவர் மீதும் சிறு வழக்கு பதிவு செய்து, கடும் எச்சரிக்கைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
0 comments:
Post a Comment