Wednesday, August 17, 2011

மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இருவர் பரிதாபகரமாக பலி !!

 நாட்டின் இருவேறு பகுதிகளில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். குறித்த சம்பவத்தினால் அரலகங்வில, நிவுல்தமன பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ரசிகா குமாரி என்பவரும் தந்திரிமலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய கருணாபால என்பவருமே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரலகங்வில பகுதியில் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெண் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலியாகியுள்ளார்.

அதேபோன்று அன்றைய தினம் பிற்பகல் 3.10 மணியளவில் தந்திரிமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கத்துக்குள்ளாகி அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கருணாபால பலியாகியுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவ்வவ் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More