skip to main |
skip to sidebar
10:15 AM
Unknown
சென்னை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி "சூப்பராக' முன்னேறியது. நேற்று நடந்த "நாக்-அவுட்' போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு வீரர் கெய்லின் புயல் வேக ஆட்டத்தில் சிதறிய சச்சின் தலைமையிலான மும்பை அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று சென்னையில் நடக்கும் பைனலில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை அணி, சொந்த மண்ணில் அசத்தி மீண்டும் கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த "பிளே ஆப்' சுற்றின் "நாக்-அவுட்' போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
பெங்களூரு அணிக்கு மீண்டும் ஒரு முறை கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். அகமது வீசிய முதல் ஓவரில் ஆசை தீர அடித்து நொறுக்கிய இவர், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. இது தான் ஐ.பி.எல்., அரங்கின் முதல் ஓவரில் வழங்கப்பட்ட அதிகபட்ச ரன். மறுபக்கம் அசத்திய அகர்வால், ஹர்பஜன் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். மலிங்கா வேகத்திலும் கெய்ல் 2 பவுண்டரி அடிக்க, கேப்டன் சச்சின் செய்வதறியாது திகைத்தார். தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் அகர்வால் தன் பங்குக்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில் போலார்டு பந்தில் அகர்வால்(41) அவுட்டானார்.
கெய்ல் 89 ரன்:
தனது வாணவேடிக்கையை தொடர்ந்த கெய்ல், ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். பின் முனாப் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற இவர், பிராங்க்ளினின் கலக்கல் "கேட்ச்சில்' 89 ரன்களுக்கு(9 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.
கோஹ்லி ஏமாற்றம்:
அடுத்து வந்தவர்கள் ஏமாற்றினர். விராத் கோஹ்லி(8), அகமது பந்தில் போல்டானார். முனாப் பந்தில் மலிங்காவின் சூப்பர் "கேட்ச்சில்' பாமர்ஸ்பாச்(4) வெளியேறினார். கடைசி 32 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ்(21), சவுரப் திவாரி(8) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட:
கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பலாக ஆடியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். அரவிந்த் பந்தில் பிலிசார்டு(10) காலியானார். அடுத்து வந்த ஹர்பஜனும்(13), அரவிந்த் வேகத்தில் வெளியேறினார். போராடிய சச்சின்(40), முகமது சுழலில் வீழ்ந்தார்.
வெட்டோரி அசத்தல்:
போட்டியின் 11வது ஓவரை வீசிய கேப்டன் வெட்டோரி இரட்டை "அடி' கொடுத்தார். முதலில் ரோகித் சர்மாவை(13) அவுட்டாக்கினார். அடுத்து ராயுடுவை(0) வெளியேற்றினார். தனது அடுத்த ஓவரில் போலார்டு(3) விக்கெட்டை கைப்பற்றிய வெட்டோரி, மும்பை அணியின் வெற்றி கனவை தகர்த்தார். ஜாகிர் வேகத்தில் பிராங்க்ளின்(16) போல்டானார். "டெயிலெண்டர்களும்' சோபிக்கத் தவற, மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சதிஷ்(18), அகமது(18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை கெய்ல், 6வது முறையாக தட்டிச் சென்றார்.
தவறு செய்த சச்சின்
மும்பை அணியின் கேப்டன் சச்சினுக்கு நேற்று எதுவுமே சரியாக அமையவில்லை. "டாஸ்' வென்ற இவர் "பேட்டிங்' தேர்வு செய்ய தவறினார். தவிர, அனுபவ வீரரான மலிங்கா, முனாப் போன்றவர்கள் இருக்கும் போது, முதல் ஓவரை பந்துவீச இந்தியாவின் இளம் அகமதுக்கு வாய்ப்பு அளித்தார். இதனை பயன்படுத்திய கெய்ல் அடித்து நொறுக்க, ஒட்டுமொத்தமாக 27 ரன்கள் எடுக்கப்பட்டன. முதல் ஓவரில் செய்த இந்த தவறு, மும்பை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)ரோகித்(ப)போலார்டு 41(31)
கெய்ல்(கே)பிராங்க்ளின்(ப)முனாப் 89(47)
கோஹ்லி(ப)அகமது 8(12)
டிவிலியர்ஸ்-அவுட் இல்லை- 21(15)
பாமர்ஸ்பாச்(கே)மலிங்கா(ப)முனாப் 4(4)
திவாரி-அவுட் இல்லை- 8(12)
உதிரிகள் 14
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 185
விக்கெட் வீழ்ச்சி: 1-113(அகர்வால்), 2-148(கெய்ல்), 3-151(கோஹ்லி), 4-157(பாமர்ஸ்பாச்).
பந்துவீச்சு: அகமது 4-0-56-1, ஹர்பஜன் 4-0-40-0, மலிங்கா 4-0-24-0, முனாப் 4-0-27-2, ரோகித் 1-0-14-0, போலார்டு 3-0-24-1.
மும்பை இந்தியன்ஸ்
பிலிசார்டு(கே)அகர்வால்(ப)அரவிந்த் 10(11)
சச்சின்(ஸ்டம்)டிவிலியர்ஸ்(ப)முகமது 40(24)
ஹர்பஜன்(கே)பாமர்ஸ்பாச்(ப)அரவிந்த் 13(7)
ரோகித்(கே)பாமர்ஸ்பாச்(ப)வெட்டோரி 13(15)
பிராங்க்ளின்(ப)ஜாகிர் 16(17)
ராயுடு எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 0(1)
போலார்டு(கே)மிதுன்(ப)வெட்டோரி 3(6)
சதிஷ்-அவுட் இல்லை- 18(22)
மலிங்கா(கே)பாமர்ஸ்பாச்(ப)முகமது 7(5)
அகமது-அவுட் இல்லை- 18(13)
உதிரிகள் 4
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-23(பிலிசார்டு), 2-41(ஹர்பஜன்), 3-68(சச்சின்), 4-82(ரோகித்), 5-83(ராயுடு), 6-89(போலார்டு), 7-99(பிராங்க்ளின்), 8-110(மலிங்கா).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-32-1, அரவிந்த் 3-0-27-2, கெய்ல் 3-0-11-0, மிதுன் 2-0-26-0, வெட்டோரி 4-0-19-3, முகமது 4-0-25-2.
0 comments:
Post a Comment