Tuesday, July 10, 2012

புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்..



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...

'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்..

தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். 

'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்" என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார். 
சஹீஹுல் புஹாரி:510

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More