Tuesday, June 19, 2012

சிறிது நேரம் சிரிக்க

 “மு.கருணாநிதி என்கிற நான் இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு இன்று மீண்டும் தமிழ் நாட்டு முதல் அமைச்சராகப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன்”
ராஜாத்தி அம்மாள் : யோவ் தூக்கத்தில இருந்து மொதல்ல எந்திரிய்யா ஒன் கனவுல நீ சி.ம் ஆகுற. எனக்கு கனிமொழி கம்பிக்கு பின்னால களி திங்குற மாதிரிதான் கனவே வருது…

 

பெண் 1 : நீ ரொம்ப குண்டாகிட்ட, அதனால் தினமும் நீச்சல் அடி, உடம்பு குறையும்,
பெண் 2 : போடி, திமிங்கலம் 24 மணி நேரமும், தண்ணில தான் நீச்சல் அடிக்குது, அதுக்கு என்ன உடம்பு குறைந்தா இருக்கு????







பொறுப்பான மனைவி.,
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தான். அவனைப் பரிசோதித்த மருத்துவர், மனைவியிடம் கூறினார்.

"அவருக்கு ஆரோக்கியமான உணவு கொடுங்க.. சந்தோஷமான மனநிலையில் வச்சிருங்க.. சண்டை போடாதீங்க.. பிரச்சினைகளைப் பேசாதீங்க.. டி.வி. சீரியல் வேண்டாம்.. புதுத் துணி, நகை கேட்காதீங்க... இப்படி ஒரு வருஷம் செய்தா.. அவர் சரியாயிடுவாரு.."

மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது, "டாக்டர் என்ன சொன்னாரு" என்று கணவன் கேட்டான்.

"நீங்க பிழைக்க வாய்ப்பில்லைன்னு சொன்னார்" என்றாள் மனைவி.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More