Sunday, June 24, 2012

அந்தப் பாடல் எது என்று தெரியுமா…



அடுத்த மாதம் லண்டன் மாநகரில் ஆரம்பிக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இளையராஜாவின் பாடல் ஒலிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. இதனால் இளையராஜாவின் பரம ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் தமிழிலேயே ஒளி, ஒலிபரப்பாகப் போவதுதான் விஷேசமான விஷயம். உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அதில் மொத்தம் 86 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான் இளையராஜாவின் பாடல் என்று இங்கிலாந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பாடல் எது என்று தெரியுமா…. 1981ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியாகி ஹிட் ஆன நான்தான் கொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா என்ற பாடல்தான் அது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

வாலியின் விறுவிறு வரிகளும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும், இளையராஜாவின் ரகளையான இசையும் இணைந்து இப்பாடலை ஹிட்டாக்கியிருந்தன. இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விறுவிறுப்பான பாடலாக ரசிக்கப்பட்டது. இப்போது ஒலிம்பிக் களத்தில், உலகப் புகழ் பெற்ற இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்தப் பாடல் இடம் பெறப் போவது குறிப்பிடத்தக்கது

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More