Thursday, June 21, 2012

முதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்!



முதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்!

முதுகு வலி என்பது இன்று பொதுவாக காணப்படக்கூடிய ஒரு உடல் இயக்க பாதிப்பாகும். இது இன்று 75% பொதுமக்களை பாதிக்கிறது. பொரும்பாலான முதுகு வலி, தசை பிடிப்பு மற்றும் உடலின் நேர்கோட்டமைப்பில் ஏற்படும் மாறுபாட்டால் வருகிறது.

கீழ்கண்ட குறிப்புகள் முதுகு வலி வராமல் தடுப்பதோடு வலி இருப்பவர்களுக்கு வலியை குறைக்க உதவுகிறது.

1. எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.
6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகு வலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

10. கீழ்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1) தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருப்பின்,
2) வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்,
3) குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்,
4) நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More