Wednesday, April 25, 2012

கோவையில்அழகிய கடன் IAS அகாடமி: ஊக்குவிப்பு முகாம்


கோவையில்அழகிய கடன் IAS அகாடமி: ஊக்குவிப்பு முகாம்

அழகிய கடன் IAS அகாடமி
நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளது.இதனை மாற்றி முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் கண்ணியத்தில் மேம்படவும் இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்துத் துறைகளையும் இயக்கும் உயர் பதவி தான் IAS.
நமது முஸ்லிம் மாணவர்களுக்கு இதைப் பற்றி முழுமையான விழிப்புணர்வூட்டி,  IASக்கு தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து பயிற்சி கொடுப்பதற்காக தொடங்கப்பட்டதுதான் அழகிய கடன்  IAS அகாடமி.

இளைஞர்களை இறையச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வூட்டி பக்குவப்படுத்தி இஸ்லாத்திற்கும் இந்தியாவிற்கும் விசுவாசமான  IAS  அதிகாரியாக உருவாக்குவதே அழகிய கடன் IAS அகாடமியின் நோக்கமாகும்.
கோவையில்...
இதனைப் பற்றி கோவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு 18.3 .2012 அன்று கரும்புக்கடை மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசலில் வைத்து முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மௌலவி ஷம்சுத்தீன் காசிமி கலந்து கொண்டு  IAS குறித்த விழிப்புணர்வு ஊட்டினார். இறுதியில் இதன் பணிகளை செவ்வனே செய்து முடிக்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆலிம்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர், வழக்கறிஞர், தொழிலதிபர்கள், பத்திரிகை ஆசிரியர், கல்லூரி மாணவர்கள் கொண்ட 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. கரும்புக்கடை மஸ்ஜிதுல் இஹ்சான் இமாம் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி ஒருங்கிணைப்பாளராகவும் பள்ளி ஆசிரியர் ஜனாப்.நியமத்துல்லாஹ் உதவி ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
இக்குழுவானது பல்வேறு அமர்வுகளில் ஆலோசனை செய்து 15 .4 .2012 அன்று IAS ஊக்குவிப்பு முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜுமுஅ தொழுகைக்குப் பின் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கோவை மட்டுமல்லாமல் பொள்ளாச்சி, உடுமலை, நீலகிரி, பாலக்காடு போன்ற பகுதிகளிலும் செய்தி சமர்ப்பிக்கப்பட்டது.


IAS ஊக்குவிப்பு முகாம்
15 .4 .2012  ஞாயிறு அன்று பூமார்க்கட் ஹைதர் அலி திப்பு சுல்தான் மஸ்ஜித் (லங்கார்கானா) ஈத்கா மைதானத்தில் iAS ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளர் மௌலவி.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி தலைமை தாங்கினார். ஆரம்பமாக தாஜுல் இஸ்லாம் மஸ்ஜித் இமாம் மௌலவி. அப்துர் ரஹ்மான் ஜலாலி M .A . திருமறை வசங்களை ஓதினார். ஆங்கிலப் பேராசிரியர் ஜனாப்.பீர் பாஷா M .A ., M .Ed ., PGDTE . அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழாசிரியர் அன்வர் பாட்ஷா  M .A ., M .Ed ., M .Phil . கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த பணிகளைப் பட்டியலிட்டார்.

மௌலவி.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி தனது தலைமையுரையில் "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் சச்சார் கமிட்டியின் பரிந்துரை குறித்தும் IAS படிப்பதற்கான அவசியத்தையும் எடுத்துரைத்தார். இட ஒதுக்கீட்டை நிறைவு செய்யும் நிலையில் கூட நம் முஸ்லிம்கள் இல்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற IAS அகாடமியின் ஒருங்கிணைப்பாளரும்ென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மௌலவி ஷம்சுத்தீன் காசிமி அவர்கள் மாணவர்களுக்கு உற்சாகம் தருகின்ற வகையிலே உரையாற்றினார். இளைஞர்களின் நிலை, சமுதாய அக்கறை, IAS படிப்பதன் அவசியம் என மாணவர்களை ஊக்குவித்தார். ஜனாப். நசீம் அவர்கள் வீடியோ கான்பாரன்ஸ் மூலமாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
உதவி  ஒருங்கிணைப்பாளர் பள்ளி ஆசிரியர் ஜனாப்.நியமத்துல்லாஹ்  M .A ., M .Ed  அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஜனாப்.சலீம் M .Sc ., B .Ed ., PGDSA .,வழிநடத்தினார்.

மாணவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள வசதியாக கார்டு கொடுக்கப்பட்டது. பவர் பாயின்ட் மூலமாக விளக்கப்பட்டது.

நிகழ்வில் சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More