Wednesday, April 25, 2012

நாலரை வயது பெண் குழந்தை பேசவும், செவியேற்கவும் உதவிகள் செய்வீர்!


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

 பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பூலாங்கால் கிராமத்தைச்சேர்ந்த சகோதரர் எஸ். காதர் மீரா அவர்கள், தன்னுடைய நாலரை வயது மகள்ஷேக் ரிஃபாயாவின் மருத்துவச் செலவிற்காக சமுதாய மக்களிடம்கோரிக்கையை வைத்துள்ளார்.
ரிஃபாயா என்ற அந்தக் குழந்தை பிறந்தது முதல் வாய் பேச முடியாத, காதுகேட்காத நிலையிலேயே இருந்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற ENTமருத்துவமனையில் பரிசோதனை செய்தபிறகு அறுவை சிகிச்சை செய்தால்பூரணமாக குணமடையும், பிற குழந்தைகள் போன்று பேசவும், கேட்கவும்முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்த காரணத்தால் அதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளார் சகோதரர் காதர் மீரா அவர்கள்.
ஆனால், குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவச்செலவிற்கான தொகையை திரட்டுவதில் அவருக்கு மிகுந்த சிரமம்ஏற்பட்டுள்ளதால், தன் மகளை பேச வைத்து, கேட்க வைத்து பார்க்க வேண்டும்என்ற ஆசையில் சமுதாய மக்கள் முன் கையேந்தி நிற்கின்றார்.
நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் தங்களால் இயன்றளவு உதவிகள்செய்து அந்தக் குழந்தை பேசுவும், செவியேற்கவும் ஒத்துழைப்புவழங்குமாறும், இறையுதவிகள் கிடைக்கவும் பிரார்த்தனைகள் செய்யுமாறும்,தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்தத் தகவலை எடுத்துரைக்குமாறும்அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழகத்தில்
தொடர்பு கொள்வதற்குசகோதரர் அஷ்ரஃப் அலீ - (+91) 8754953543 குவைத்தில்தொடர்பு கொள்வதற்குமருத்துவர் லீ - (+965)
99503484 - drali_q8@yahoo.com 97872482 / 66641434 www.k-tic.com / www.mypno.com www.ulamaa-pno.blogspot.com

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More