Sunday, January 15, 2012

வீட்டில் தனியாக இருந்த தொழில் அதிபர் மனைவி படுகொலை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆன்- லைன் விபசாரம் : பெண் கொலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கைது


 

ஆடம்பர வாழ்க்கைக்காக ஆன்- லைன் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணைக் கொன்றதாக தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னைஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வெங்கடாச்சலம் நகர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் பாடியில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தி என்கிற யாஸ்மின், 46. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். தனியார் கல்லூரியில் படிக்கின்றனர்.
கடந்த 12ம் தேதி யாஸ்மின்மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கம்மலுக்காக காதுகள் அறுக்கப்பட்டிருந்தன. திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வந்தனர். ஆவடி உதவிக்கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் திருமுல்லைவாயல்ஆவடிஆவடி டேங்க் பேக்டரி என மூன்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில்போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
லியாகத் அலியின் நிறுவனத்தில் முன்பு வேலை பார்த்தவர்கள்அவரது வீட்டிற்கு அறிமுகமானவர்கள்குடும்ப பகை அல்லது முன் விரோதம் கொண்டவர்கள் மற்றும் வீட்டருகே கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என சந்தேகத்திற்கிடமான 15 பேரிடம், விசாரணை நடந்தது. யாஸ்மின்ரகசியமாக மொபைல் போன் பயன்படுத்தியதும் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த எண் பயன்பாடு பற்றியும் யாரிடம் பேசியிருந்தார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.
அப்போது செங்குன்றம் அடுத்த பொத்தூர் தாய் நகரைச் சேர்ந்த கோபிநாத், 25. கொரட்டூர் அடுத்த பாடிநம்மாழ்வார் நகரைச் சேர்ந்த முத்துக்காமு என்பவரின் மகன் சுப்ரமணி, 23. ஆகியோர் சிக்கினர். இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகொரட்டூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள். அவர்களிடம் போலீஸ் விசாரித்ததில் கொலையை ஒப்புக் கொண்டனர். பாடி டி.என்.எச்.பி.நகரைச் சேர்ந்த அன்வர் என்ற ஆட்டோ டிரைவர் மூலமேயாஸ்மின் தங்களுக்கு அறிமுகமானதாக கூறினர்.
அன்வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்யாஸ்மின் தனக்கு நேரடியாக அறிமுகம் கிடையாது. ஆன்- லைன் மூலம் யாஸ்மின் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதை அறிந்துஅம்பத்தூர்ஆவடி சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள்யாஸ்மினிடம் தொடர்பு கொண்டனர். அவர்கள் மூலமே தனக்கும் அறிமுகமானதாக கூறினார். இதையடுத்துதன் மூலமாக யாஸ்மினிடம் அறிமுகமான கோபிநாத்சுப்ரமணி ஆகியோர்அவரிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
கோபிநாத்சுப்ரமணி ஆகியோர் போலீசாரிடம் கூறியுள்ளதாவது: ஒரே வீட்டில் வசித்தாலும் யாஸ்மினுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு இருந்தது. ஆடம்பர செலவு செய்வதில் அவர் ஆர்வம் உள்ளவர். இதற்கு கணவரிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. அதனால் ஆன்- லைன் மூலம் விபசாரம் செய்து ஆடம்பரச் செலவு செய்துள்ளார். இப்படித்தான் நாங்கள் அவருடன் பழகினோம். வேறு இடத்தில் இருந்து பெண்களை அழைத்து வருபவர்களுக்கு வசதியாகஅவரது வீட்டை மணிக்கு 1,000 ரூபாய் முதல் 2,000 வரை வாடகைக்கு விடுவார். காலை 10 மணி முதல் மாலை அல்லது மணி வரை அவரது வீட்டை பயன்படுத்துவோம்.
கணவர் வீட்டில் இருக்கும் போதுமுன்னெச்சரிக்கையாக மொபைல் போனை அணைத்து வைத்துவிடுவார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவார். கணவர்மகள்கள் வெளியே சென்ற பிறகு விபசாரத்திற்கு ஆட்கள் வந்தால்வீட்டின் பின் பக்க கதவை திறந்து வைத்துமுன் பக்க கதவை பூட்டி வைப்பார். சமீபத்தில் அவர் எங்களிடம்எனது கணவர் வீட்டை விற்க முயற்சித்து வருகிறார். அப்படி விற்று விட்டால் என்னை கண்டு கொள்ள மாட்டார். என் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டால்கொள்ளையர்கள் அவரை கொலை செய்து பணம்நகையை கொள்ளையடித்துச் சென்று விட்டதாகபோலீசையும் மற்றவர்களையும் நம்ப வைத்து விடலாம். அதன் பின் வீடு எனக்கு கிடைத்து விடும். உங்களுக்கும் கணிசமான தொகையை தருகிறேன் என்று   திட்டம் போட்டுக் கொடுத்தார். இருவரும் யாஸ்மினுடன் கடந்த 6 மாதமாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது, கணவனுடன் தகராறு பற்றியும், செலவுக்கு பணம் தராதது பற்றியும் கூறியிருக்கிறார். மேலும், மதுரவாயலில் உள்ள வீட்டை விற்று பணம் வைத்துள்ளதாகவும், ஸீ 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


புதிய திட்டம்: அவரது கணவரால் எங்களுக்கு எந்தப்பிரச்னையும் இல்லை. கணவரையே தீர்த்துக் கட்டச் சொல்பவர் எங்களை போலீசில் காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார். வீட்டை விற்க ஏற்பாடு செய்துள்ள அவரது கணவர்அட்வான்சாக பெரிய தொகையை வாங்கி வைத்திருப்பார். அதனால் யாஸ்மினை கொலை செய்து அந்த பணம்நகையை கொள்ளை அடித்து பங்கு போட்டுக்கொள்ள நாங்கள் புதிய திட்டம் போட்டோம். அதன்படி 12ம் தேதி பகல் பல்சர் பைக்கில் கத்திஇரும்பு ராடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு யாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.
புழலேரிக்கரை அருகே பைக்கை நிறுத்தி விட்டுபின்பக்க வழியாக வீட்டிற்குள் சென்றோம். அங்கு யாஸ்மின் தனியாக இருந்தார். தலையணையால் அவரது முகத்தில் அழுத்தினோம். இறந்து விட்டார் என்று நினைத்துபீரோவை உடைத்து பணம்நகையை தேடினோம். நகை மட்டும் கிடைத்தது. இறந்து விட்டார் என்று நினைத்திருந்த யாஸ்மின்மயக்கம் தெளிந்துகூச்சல் போட முயற்சித்தார். அதனால்கத்தியால் தொண்டையில் குத்திக் கொலை செய்தோம். காதை அறுத்து கம்மலை எடுத்துக் கொண்டுஅங்கிருந்து தப்பிவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 
அவர்கள் பயன்படுத்திய டூவீலர்கத்திஇரும்பு ராடுமொபைல் போன்கள் மற்றும் 12 சவரன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

யாஸ்மின் கணவர் லியாகத் அலியிடம் போலீசார் விசாரித்தபோது, மனைவி செல்போன் பயன்படுத்துவதில்லை, வீட்டில் தொலைபேசி இணைப்பும் கிடையாது, என்னை தொடர்பு கொள்வது என்றால் பி.சி.ஓ. மூலம்தான் பேசுவார் என்று கூறியிருந்தார். ஒரு தொழிலதிபர் வீட்டில் போன் இல்லாமல் இருக்குமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில்  ஒரு ரீசார்ஜ் கடையில் ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அடிக்கடி யாஸ்மின் ரீசார்ஜ் செய்வார் என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கினர். அந்த எண் யாஸ்மின் பெயரில் இல்லை, வேறொரு நபர் பெயரில் இருந்துள்ளது. அதை வைத்து விசாரிக்கும்போதுதான், சம்பவத்தன்று கோபிநாத் பேசியிருப்பதும், அடிக்கடி அவர் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் இருவரையும் வீட்டில் சென்று போலீசார் மடக்கினர். அப்போது யாஸ்மின் செல்போனையும், இவர்கள் எடுத்துச் சென்று உடைத்து தூள், தூளாக்கி போட்டதும் தெரிந்தது. அந்த செல்போன் பாகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இவரிடம் செல்போன் இருந்ததே கணவருக்கு தெரியவில்லை. தன்னை தொடர்பு கொள்ள பிசிஓ மூலம்தான் மனைவி பேசுவார் என கூறியிருக்கிறார். நல்ல ஆடை வேண்டும். நிறைய நகைகள் அணிய வேண்டும் என்ற பெண்களின் ஆசை ஏற்க கூடியதுதான். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பதும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். 

பணத்துக்காக கணவர், பிள்ளைகளுக்கு தெரியாமல் பாலியல் தொழில் செய்தவர், பணத்தையும் பறி கொடுத்து கடைசியில் உயிரையும் பறிகொடுத்துவிட்டார். நல்ல வழியில் வரும் பணமே நிலைக்காத போது, இதுபோல் முறைகேடாக வரும் பணம் எப்படி நிலைக்கும்?

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More