சென்னை : கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின. உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி ஏரி மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 2,539 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து 3,957 கன அடி. மழைநீர் வரத்து அதிகமானதால் பூண்டி ஏரி திறக்கப்பட்டது. இதன் மதகு வழியாக வினாடிக்கு 3,777 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பேபி கால்வாயில் 20 கன அடி நீர் செல்கிறது.
புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 3,147 மில்லியன் கன அடி. நீர்வரத்து வினாடிக்கு 3,224 கன அடி. குடிநீருக்காக 180 கன அடியும், மதகு வழியாக வினாடிக்கு 2,500 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போது 847 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து 648 கன அடி. இங்கிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இருப்பு 2,771 மில்லியன் கன அடி. நீர்வரத்து 2,838 கன அடி. சென்னை குடிநீருக்காக 150 கன அடியும், மதகு வழியாக 2,480 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment