Monday, November 28, 2011

மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2,000



நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை, பாளை மார்க்கெட்டுகளுக்கு ஆலங்குளம், சிவகாமிபுரம், முனைஞ்சிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.மழைக் காலத்தையொட்டி மார்க்கெட்டுகளுக்கு பூ வரத்து குறைந்துள்ளதால், மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது

நேற்று வளர்பிறையில் சுபமுகூர்த்தம் என்பதால், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ஸி2000க்கு விற்பனையானது. வரலாறு காணாத இவ்விலை உயர்வால், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு மல்லிகை பூக்களை வாங்க முடியாமல் திணறினர். பிச்சிப்பூ விலையும் கிலோ விலை ரூ.1750 என இருந்ததால், நடுத்தர குடும்பத்தினரால் பூக்களை வாங்க முடியவில்லை. 

கேந்தி பூக்கள் கிலோ ரூ.80க்கும், வாடாமல்லி ரூ.50க்கும் விற்கப்பட்டன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரெட்ரோஸ் நெல்லை, பாளை மார்க்கெட்டுகளில் மலிவு விலையில் கிடைத்தது. ரெட்ரோஸ் ஒருகிலோ ஸி30க்கும், ஒரு பாக்கெட் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைகாலம் துவங்கியதில் இருந்தே பாளை பூ மார்க்கெட்டுக்கு கனகாம்பரம் சுத்தமாக வரத்து இல்லை என வியாபாரிகள் வருத்தப்பட்டனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More