புதுடெல்லி : நுரையீரலில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டு வரும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், தான் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும் விரைவில் களமிறங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ். இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் விளையாடியபோது, நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டார். இங்கிலாந்து தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார்.
மருத்துவப் பரிசோதனையில் அவரது இடது நுரையீரலில் கோல்ப் பந்து அளவுக்கு ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் இருந்து திரும்பியதும் இதற்காக விரிவான ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நல்ல வேளையாக அது புற்றுநோய் கட்டி அல்ல என்று தெரியவந்ததாக யுவராஜின் தாய் தகவல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் யுவராஜ் நேற்று கூறியதாவது: ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்புக்கு நன்றி. விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது முழுமையாக குணமடைந்துவிட்டேன். முழு உடல்தகுதியுடன் விரைவில் விளையாடத் தயாராகி விடுவேன். அதற்காக கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடியும் என நம்புகிறேன். இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment