Monday, November 28, 2011

இறுதிப் போட்டியில் பெடரர் & சோங்கா மோதல்



லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) பிரான்சின் ஜோ வில்பிரைடு சோங்காவுடன் மோதுகிறார். இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் & மகேஷ் பூபதி ஜோடி போராடித் தோற்றது.

ஒற்றையர் ரவுண்ட் ராபின் லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து தாமஸ் பெர்டிச், டேவிட் பெர்ரர், பி பிரிவில் இருந்து பெடரர், சோங்கா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். அரை இறுதியில் பெடரருடன் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய பெடரர் 7&5, 6&3 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் ஜோ வில்பிரைடு சோங்காவுடன் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதினார். இதில் சோங்கா 6&3, 7&5 என்ற செட் கணக்கில் வென்றார். இறுதிப் போட்டியில் பெடரர் & சோங்கா மோதுகின்றனர். இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதியில் இந்தியாவின் பயஸ் & பூபதி ஜோடி 4&6, 6&4, 6&10 என்ற செட் கணக்கில் பிர்ஸ்டன்பர்க் & மட்காவ்ஸ்கி ஜோடியிடம் கடுமையாகப் போராடி தோற்றது. மற்றொரு அரை இறுதியில் மேக்ஸ் மிர்னி & டேனியல் நெஸ்டர் ஜோடி 7&6 (10&8), 6&4 என்ற செட் கணக்கில் பாப் பிரையன் & மைக் பிரையன் ஜோடியை வீழ்த்தியது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More