Tuesday, November 22, 2011

ஷாரூக் கானின் காஸ்ட்லி கார் பரிசை வாங்க மறுத்த ரஜினி!


ஷாரூக் கானின் காஸ்ட்லி கார் பரிசை வாங்க மறுத்த ரஜினி!

சென்னை: ஷாரூக்கான் நடித்து தீபாவளி அன்று வெளியான படம் 'ரா 1'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சி கெஸ்ட் ரோலில் நடித்தார். படத்தை தென் இந்தியாவில் வெளியிட நினைத்து ஷாரூக், தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்தார். மேலும் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நடித்தால் தென்னிந்தியாவில் வசூல் அள்ளி விடலாம் என நினைத்த ஷாரூக், சூப்பர் ஸ்டார் ரஜினியை அனுகினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பெருந்தன்மையுடன் நடித்து கொடுத்தார். இதனையடுத்து தனக்காக நடித்த ரஜினிக்கு பி.எம்.டபிள்யூ 7 சீரியஸ் காரை பரிசாக தருவதாக அறிவித்தார். ஆனால், புகழச்சி மற்றும் பரிசுகளை விரும்பாத நம்ம சூப்பர் ஸ்டார், 'எனக்கு இந்த பரிசு' வேண்டாம் என அன்போடு தெரிவித்தார். மேலும், உங்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய சூப்பர் ஸ்டார், உங்கள் அன்பிற்கு நன்றி என்று கூறினார். இதனால் ஷாக் அடைந்த ஷாரூக்கான், இப்படியொரு எளிமையான மனிதரை நான் திரையுலகில் கண்டதில்லை என்று கூறினார். ரஜினியின் அன்பு என்னை கண்கலங்க வைத்தவிட்டதாக ஷாரூக்கான் கூறினார்.

1 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More