Tuesday, November 22, 2011

பஸ் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம்!


பஸ் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழகத்தில் சென்ற வாரம் பஸ் கட்டணம் பல மடங்காக உயர்ந்தது. இந்த பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்கள் நடத்தி வரும் நிலையில், கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி பஸ் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 
மேலும், கட்டண உயர்வு குறித்து 3 வாரத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More