Tuesday, November 22, 2011

லட்சுமன் பொறுமையாக ஆடுவதால் தான் ரன் குவிக்கிறார் : வீரேந்திர ஷேவாக்


லட்சுமன் பொறுமையாக ஆடுவதால் தான் ரன் குவிக்கிறார் : வீரேந்திர ஷேவாக்

மும்பை: பேட்டிங்கில் இறங்குவதற்கு முன்பு, தன்னை ஆயத்தப்படுத்த 45 நிமிடங்கள் எடுத்து கொள்கிறார் விவிஎஸ் லட்சுமன். இதனால்தான் அவர் பொறுமையாக, நிதானமாக, பதட்டமில்லாமல் ஆடி ரன் குவிக்கிறார் என்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அரங்கில் 'சியட்' சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாகிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும் இந்திய வீரர் லட்சுமனுக்கு, இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவை என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் மேடையி்ல் இருந்த ஷேவாக்கிடம், லட்சுமனின் பொறுமைக்கான காரணம் குறித்து கேட்டார். 

அதற்கு பதிலளித்த ஷேவாக் கூறியதாவது, இந்திய அணியில் 5வது பேட்ஸ்மேனாக லட்சுமன் களமிறங்குவதால், அவருக்கு போதுமான நேரம் கிடைக்கிறது. போட்டியில் விளையாட செல்லும் முன் 2 முறை ஷவர் குளியல் போட்டுவிடுவார். பின்னர் பூஜைகளை செய்துவிட்டு சில பயிற்சிகளை செய்வார். இதற்கு குறைந்தது 45 நிமிடங்களாவது லட்சுமன் செலவழிப்பார். அந்த நேரத்தில் அவரது உடல் மற்றும் மனம் போட்டியில் விளையாட தயாராகிவிடும். இதனால் தான் லட்சுமன் பொறுமையாகவே காணப்படுகிறார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More