சென்னை : அரும்பாக்கம் பாமக நிர்வாகி நாகராஜ் கொலையில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.
அரும்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (34). அண்ணாநகர் பகுதி பாமக இளைஞரணி செயலாளர். ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரது மனைவி லதா (25). இவர்களுக்கு ஐஸ்வர்யா (4) என்ற மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை நாகராஜ் தன் வீட்டு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆட்டோவில் 4 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் நாகராஜை அழைத்து பேசினர். திடீரென 2 பேர் இறங்கி நாகராஜ் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் இறந்தார்.
இந்த தகவல் அறிந்த அண்ணா நகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம், அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் அனந்தராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
2009ல் நாகராஜின் அண்ணன் சரவணன் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கும்பலுக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என கருதி அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக, திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு, சூளைமேடு என்ஜிஓ காலனியை சேர்ந்த கார்த்திக் (24), செனாய் நகர் பரமேஸ்வரி நகரை சேர்ந்த வெங்கடேசன் (25) ஆகியோர் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
மேலும் நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேனியை சேர்ந்த நாகராஜ், ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
நாகராஜ் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மதியம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

0 comments:
Post a Comment