Thursday, September 15, 2011

புதுச்சேரி ஜிப்மரில் X-Ray Technician வேலை

மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் புதுச்சேரி JIPMER மருத்துவமனையில் X-Ray Technician  வேலையில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03
பணியின் பெயர்: X-Ray Technician  (Radio - Theraphy)
காலியிடங்கள்: 12 (பொது-8, ஒபிசி-3, எஸ்டி-1)
சம்பளம்: ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ.4,200
வயதுவரம்பு: 26.09.2011 தேதிப்படி 35-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ST பிரிவினருக்கு ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: Radio theraphy Technology பிரிவில் வருடமும் B.Sc முடித்தப்பின் வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது Radio theraphy Technology-ல் இரண்டு வருட டிப்ளமோ முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ 500. ST  பிரிவினருக்கு ரூ.250 இதனை "Accounts Officer, JIPMER" என்ற பெயரில் பாண்டிச்சேரி State Bank of India JIPMER கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வுநேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குறிப்பு:
1. விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.
2. பணி அனுபவச்சான்றிதழ் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்.
3. கல்வித்தகுதிதொழில் நுட்ப கல்வித்தகுதி சான்றிதழ்களின் அட்டெஸ்ட் நகல்கள்.
4. வயதை நிரூபிப்பதற்கான 10-ம் வகுப்பு சான்றிதழ் அட்டெஸ்ட் நகல்.
5. ST ,OBC பிரிவினர்கள் மத்திய அரசு பணிக்கான ஜாதி சான்றிதழ்களின் அட்டெஸ்ட் நகல்.
6. விண்ணப்பப் படிவம் அடங்கிய கவரின் மேல் "Application for the Post of X-Ray Technician (Radiotheraphy)" என எழுத வேண்டும்.
பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 26.09.2011
விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Director,
JIPMER,
PUDUCHERRY- 605006


ஐடிஐ படித்தவர்களுக்கு ராணிப்பேட்டை BHEL-ல் வேலை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இயங்கி வரும்  BHEL நிறுவனத்தில் உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Artisans
காலியிடங்கள்: 180 (UR-92, OBC-51, SC-35,ST-2) இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு 26 இடங்களும், PHபிரிவினருக்கு இடங்களும் அடங்கும்.
சம்பளம்: ரூ.11,700 - 23,000
வயதுவரம்பு: 01.09.2011 தேதிப்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/STபிரிவினருக்கு வருடங்களும், OBC பிரிவினருக்கு வருடங்களும், PH பிரிவினருக்கு தலா 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். Artisansபணியில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பணி அனுபவத்தை பொறுத்து ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்வரும் தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்து NTC மற்றும்NAC சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். ஐடிஐ படிப்பில் OBC , பொது பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழிற்பிரிவுகள் வாரியாக காலியிட பகிர்வு வருமாறு:
1. Fitter -98
2.Welder -56
3.Electrician -6
4. Material Handling Operator -11
5.Instrument Mechanic -3
6. Millwright Mechanic-3
7. Electronics Mechanic-3
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பயணச்சீட்டை சமர்பித்தால் பயணக் கட்டணம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.125. 
விண்ணப்பக் கட்டணத்தை 'Power Jyoti Account No: 31170378124" என்ற பெயரில் பணமாக செலுத்தி அதற்குரிய செல்லானை பெற்றுக்கொள்ளவும். பணத்தை முகுந்தராய புரத்திலுள்ள SBI வங்கி கிளை கோடு: 7013. SC/ST/PHபிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2011. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்பியபின் ஆன்லைன் விண்ணப்பப் படிவ பதிவு சான்றை பதிவிறக்கம் செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டண சான்று மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது"Application for the Post of Artisans in BHEL - Ranipet" என்று குறிப்பிடவும்.
தபாலில் விண்ணப்ப படிவ பதிவு சான்று மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் வந்து சேர கடைசி நாள்:01.10.2011
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DGM/HR,
BHEL,
Ranipet -632406,
Vellore District, Tamilnadu.


மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வேலைகள்

 சென்னை அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பாரா கிளினிக்கல்கிளினிக்கல் துறைகளில் பணிபுரிய பேராசிரியர்கள்உதவி பேராசிரியர்கள்.
2.பி.எஸ்சிடிப்ளமோ முடித்த செவிலியர்கள்.
3.OT/CSSD/Central Lab/Blood Bank/Radiography துறைகளில் பணிபுரிய டெக்னீஷியன்கள்
4.எலக்ட்ரிக்கல்சிவில்பிளம்பிங்மோட்டார் வாகன பராமரிப்பு இன்ஜினியர்.
5. MRD, அனைத்து துறைகளுக்கும் கிளார்க்.
தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவை இ-மெயில் மூலம் அனுப்பவும்.
இ-மெயில் முகவரி: medicalprofessionalschennai.gmail.com

பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

 இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Container Corporation Of India Ltd.(CONCOR) என்ற நிறுவனத்தில் வருட ஒப்பந்த அடிப்படையிலை பணிபுரிய தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணியின் பெயர்:  Assistant Manager Civil
மொத்த காலியிடங்கள்: 4 (பொது-3, ஒபிசி-1)
காலியிட எண்: 011
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: புதுதில்லி
காலியிட எண்: 012
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: அகமதாபாத்
காலியிட எண்: 013
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: சென்னை
காலியிட எண்: 014
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: கொல்கத்தா
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2011 அன்று 21 -லிருந்து 38-க்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில்ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.31,000
இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.32,000
மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.33,000
தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்கள்பணி அனுபவ சான்றிதழ்நிரந்தர வசிப்பிட அத்தாட்சிக்கான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு ஜோடி அட்டெஸ்ட் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை நேர்முகத் தேர்வுக்கு எடுத்து வரவேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CONCOR Bhawan, C3 Marhura Road, Opp.Apollo Hospitals,
New Delhi - 110076.
மேலும் விவரங்களுக்கு செப்டம்பர் 7 - 13 EMPLOYMENT SERVICE TAMIL WEEKLY பார்க்வும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More