இ.ஆர்.கே., மகளிர் சமுதாய கல்லூரியில் இலவச தொழிற்கல்வி சேர்க்கை நடக்கிறது. கல்லூரி முதல்வர் சக்தி வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்நாடு தொழில் நுட்ப கழகம் சார்பில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் சார்ந்த படிப்புகளை நடத்தி வருகிறது.
கிராம பகுதி மாணவர்கள் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையும் நோக்கில் அரூர் அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மகளிர் சமுதாய கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு இலவச சேர்க்கை நடக்கிறது. இக்கல்லூரியில் தையல் பயிற்சி, அழகு கலை, மொபைல்ஃபோன் சர்வீஸ்,கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் ஞாயிறு மட்டும் நடக்கும். எட்டாம் வகுப்பு படித்த மகளிர்கள் இப்பயிற்சியில் சேரலாம். ஆறு மாத இடைவெளிக்கு பின் பெரியார் பல்கலைக்கழக சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்கள் பெற விரும்புவோர் 97883 - 43727, 99434 - 72183 என்ற மொபைல்ஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
எம்.பி.ஏ படிக்க பட்டதாரிகளுக்கு "ஸ்பெஷல்' வாய்ப்பு :
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்தில் இந்த காலண்டர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வி நெல்லை கல்வி மையம் நெல்லை ஜங்ஷன் ஷிபா ஆஸ்பத்திரி அருகில் கைலாசபுரம் நடுத் தெருவில் செயல்பட்டு வருகிறது. இக்கல்வி மையத்தில் நுழைவுத் தேர்வு இல்லாமல் ஆறு பிரிவுகளை கொண்ட எம்.பி.ஏ மேலாண்மை இரு ஆண்டு படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பு முடித்து பணியில் இருப்பவர்கள் புரொபஷனல் எம்.பி.ஏ ஒரு ஆண்டில் படிக்கலாம்.
பட்ட மேற்படிப்பில் எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், சுற்றுசூழல் கல்வி, கணிதம், உளவியல்,சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.ஏ தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, கிரிமினலாஜி, பொது நிர்வாகம்,தகவல் பரிமாற்றம், செய்தி பிரிவு, பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
கம்ப்யூட்டர் பிரிவில் எம்.சி.ஏ 2 ஆண்டு படிப்பாகும். பி.சி.ஏ படித்தவர்கள் மற்றும் டிகிரியுடன் பி.ஜி.டி.சி.ஏ படித்தவர்கள் இதில் சேரலாம். டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2 ஆண்டுகளில் படிக்கலாம். பி.ஜி.டி.சி.ஏ டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் "ஸ்பாட் அட்மிஷன்' நடந்து வருகிறது.
பட்டப் படிப்பில் பி.எஸ்சி கணிதம், உளவியல், பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம், பி.காம் கம்ப்யூட்டர், பி.ஏ தமிழ், ஆங்கிலம் இந்தி, இஸ்லாம், அராபிக், பொருளாதாரம், நூல் அறிவியல், பி.லிட் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு அட்மிஷன் நடக்கிறது. பட்ட மேற்படிப்பு டிப்ளமோ பிரிவில் நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள், வரி காப்பீடு, ஏற்றுமதி, இந்தி, யோகா, ஆங்கில பயிற்சி, மியூசிக்,ஆஸ்பிடல் மேலாண்மை உட்பட 14 பிரிவுகளுக்கும், டிப்ளமோ பிரிவில் 13 பிரிவுகளுக்கும்,சான்றிதழ் பாட பிரிவில் 9 பிரிவுகளுக்கும் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
ஏற்கனவே பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் கூடுதல் பட்ட மேற்படிப்பு ஒரு ஆண்டிலும், ஏற்கனவே பட்ட படிப்பு படித்தவர்கள் கூடுதல் பட்ட மேற்படிப்பு ஒரு ஆண்டில் படிக்கலாம். இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அடுத்த ஆண்டிற்கான படிப்பை இங்கு தொடரலாம் . அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு பல்கலை., நெல்லை கல்வி மையத்தை (0462 - 4020304, 94873 00588) தொடர்பு கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

வீடு தேடி வருது உங்க தகுதிக்கு வேலை!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மைல் நீள கியூவில் காத்திருந்து, முட்டிமோதி கல்விச் சான்றிதழை பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். அப்படியே பதிவு செய்தாலும்,அரசு வேலை என்பது கோடியில் சிலருக்குதான் கிடைக்கும். அந்த காலம் எல்லாம் இப்ப மலையேறியாச்சு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கூட வேலை, வீடு தேடி வரப் போகிறது.
இந்தாண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் படிப்பு, திறமை ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் டேட்டாபேஸ், அரசு துறைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் பார்க்கும்படியான வசதியை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் பட்டியலும் சேர்க்கப்பட உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடன் உள்ள மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்காமலேயே அவர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டக்குழுவின் இயக்குனர் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தாண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை தனியார் நிறுவனங்களும் பார்க்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு மற்று பயிற்சி துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார். அரசின் இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், வேலை தேடி இளைஞர்கள் பல நிறுவனங்களின் படியேறிய காலம் மாறி, நிறுவனங்கள் திறமையான இளைஞர்களுக்கு வேலை தர போட்டி போடும் நிலை உருவாகும். வேலை உங்கள் வீடு தேடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
பயிற்சியும் உண்டு - இது ஒரு நல்ல முயற்சி. தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியலை பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய முடியும். படிப்புடன் பயிற்சி பெற்றவர்களுக்கும், படித்து முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டேட்டாபேசை தொழிற்பயிற்சி நிறுவனங்களும் பார்க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கும், பாதியில் படிப்பை நிறுத்தியவர்களுக்கும் தொழில்பயிற்சி அளித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும் என தனியார் நிறுவன உரிமையாளர்களும், கல்லூரி நிர்வாகிகளும் கூறுகின்றனர்.
மாணவர்களிடையே சகோதரத்துவம் வளர வேண்டும்
"இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராக்கிங் செய்வது குறித்த பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தண்டனைகள் மூலம் ராக்கிங் கொடுமை குறைந்துள்ளது. இதுவரை ராக்கிங் கொடுமையால் 35 மாணவர்கள் இறந்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவம் வளர்ந்தால், பல்வேறு பிரச்னைகள் உருவாகாது. படிக்கும் காலங்களில் கல்வியுடன் ஒழுக்கத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். சமூகத்தில் பொறுப்புள்ள இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வளர வேண்டும்.

0 comments:
Post a Comment