Wednesday, September 7, 2011

அரசு உதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், (தகுதி உள்ளவர்களுக்கு உதவி செய்யவும்)


பயிற்சி செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையத்தில் ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து இப் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ம.ந.சுந்தரராமன் வெளியிட்ட அறிக்கை. ஜப்பானிய காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாக வரும் ஒரு எளிய தொழில். குறைந்த முதலீட்டில் குறைந்த இடத்தில் ஜப்பானிய காடைகளை வளர்க்கலாம். காடைகள் எந்த ஒரு தட்பவெட்ப நிலையிலும் நன்கு வளரக் கூடியன. இத் தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறந்தப் பயிற்சி பெற்ற யாவரும் ஈடுபடலாம். காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. ஜப்பானிய காடை வார காலத்தில் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. காடை இறைச்சியில் அதிக புரதமும்குறைந்த அளவு கொழுப்பும் இருப்பதால் குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும். ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி செப்டம்பர் 9-ம் தேதி ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும். பயிற்சியில் பங்கு பெற ஆர்வமுள்ள ஆண்பெண் மற்றும் உழவர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாலம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர்உழவர் பயிற்சி மையம்,ஏனாத்தூர்காஞ்சிபும்-631 561. தொலைபேசி எண்: 044-27264019, கைப்பேசி: 9940308012.


ஐ.ஏ.எஸ். தேர்வு: இலவச ஆலோசனை முகாம்

இந்திய குடிமையியல் பணிஇந்திய காவலர் பணிஇந்திய வனப்பாதுகாப்புப் பணி மற்றும் பொறியியல் பணி தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது.
 இந்த முகாமை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் வாவூசி அறக்கட்டளையின் சங்கம் ஐஏஎஸ் கல்வியகம் நடத்துகிறது. இந்த இலவச முகாமில் பங்குபெற விரும்புபவர்கள் www.sangamiasacademy.com என்ற இணையதள முகவரி அல்லது 044-22751002, 22751704, 9940670110, மற்றும்9551072114 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சங்கம் ஐஏஎஸ் கல்வியகம், 3-சிரயில்வே கேட் சாலைசங்கர வித்யாலய பள்ளி எதிரில்வண்டலூர் பூங்கா அடுத்த நிறுத்தம்ஊரப்பாக்கம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முதுகலை பட்டத்தாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பணி
 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் Wadia Institute of Himalayan Geology என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Adv/2011/Institute Positions/Estt. 23.08.2011
1. பணியின் பெயர்: Research Associate
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: Geology/ Geophysics அல்லது Atmospheric Sciences பிரிவில் Ph.D. முடித்திருக்க வேண்டும்.Structural Geology/Metamorphic/Engineering Geology/Seismology துறையில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.22,000 மற்றும் வீட்டு வாடகைப்படி.
வயதுவரம்பு: 30.09.2011 அன்று 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி காலம்: ஆண்டுகள்
2. பணியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள்: 6 -10
கல்வித்தகுதி: Geology/ Geophysics பிரிவில் முதல் வகுப்பில் M.Sc./M.Tech  முடித்திருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட பாடத்தில் NET/GATE/UGC-CSIR தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.16,000 மற்றும் வீட்டு வாடகைப்படி.
வயதுவரம்பு: 30.09.2011 அன்று 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி காலம்: ஆண்டுகள்
3. பணியின் பெயர்: Sammer Student Fellowship
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: Earth and Atomospheric Sciences பாடப் பிரிவில் ஒருங்கிணைந்த M.Sc. அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.5,000
வயதுவரம்பு: 30.09.2011 அன்று 28-க்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளுக்கு SC/ST பிரிவினருக்கு ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
Sammer Student Fellowship பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகல்களுடன் அதில் சேர விரும்புவதற்கான காரணத்தை 250 வார்த்தைகளில் எழுதி அனுப்ப வேண்டும்.
தேர்வுக்கு அழைக்கப்படுவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
SC/ST/OBC பிரிவினர்கள் மத்திய அரசு பணிகளுக்கான ஜாதி சான்றிதழின் அட்டெஸ்ட் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்தின் 3-வது காளத்தில் இ-மேயில் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியற்றை குறிப்பிடவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Registrar,
Wadia Institute of Himalayan Geology,
33, General Mahadeo Singh Road,
Dehradun - 248001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 30.09.2011



தமிழக அரசு அறிவிப்புகள்

காதொலிக் கருவிகள் வழங்கப்படும் பள்ளிகல்லூரிகளில் பயிலும் செவித்திறன் குறையுடைய ஆயிரம் மாணவமாணவியருக்கு ரூ.கோடி செலவில் காதொலிக் கருவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவித்தார்.
 பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமூகமாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 செவித்திறன் குறையுடையோருக்கு இப்போது உடலில் அணியும் காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை அணிவதற்கு மாணவமாணவியர் தயங்குவதினாலும்,வெளியிலிருந்து வரும் ஒலியைப் பெற்றுத் தருவதில் உள்ள சிரமத்தினாலும்இதற்குப் பதிலாக காதுக்குப் பின்புறம் அணியும் காதொலிக் கருவியை வழங்குவது அவசியமாகிறது.
 இந்தக் கருவியை காது இருக்கும் நிலையிலேயே அணிவதால்ஒலிப் பெருக்க அளவு முழுமையாக இருக்கும். கடுமையானமுழுமையான செவித்திறன் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்தக் கருவி மிகவும் பயனுடையதாக இருக்கும்.

திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே உதவித் தொகையும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவித்தார்.திருமணத்துக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை திருமணத்துக்கு முன்பே வழங்க வேண்டும் என்றார்.
அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்த பதில்:
திருமண உதவித் தொகை பெற திருமண தேதிக்கு 40 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே உதவித் தொகையாக ரூ. 25 ஆயிரமும்தாலிக்கு கிராம் தங்கமும் வழங்கப்படும். அமைச்சர்கள்மாவட்ட ஆட்சியர்கள்அதிகாரிகள் மூலம் வாரந்தோறும் இந்த உதவிகள் வழங்கப்படும் என்றார்.

மடிக் கணினியுடன் பேசும் மென்பொருள். அரசுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற 220 மாணவமாணவிகளுக்கு அரசு வழங்கும். மடிக் கணினியுடன் பேசும் மென்பொருள் (ஜாஸ் சாப்ட்வேர்) வழங்கப்படும் என்று அமைச்சர் செல்வி ராமஜெயம் இதை அறிவித்தார்.
பார்வையற்ற பிளஸ் 1, பிளஸ் பயிலும் மாணவமாணவியருக்கு பேசும் மென்பொருள் ரூ.44லட்சம் செலவில் வாங்கி லேப்டாப்புடன் வழங்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத் திறனாளி மாணவ,மாணவியர்கள் 560 பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்'' என்று அவர் அறிவித்தார்.
 பெட்ரோல் ஸ்கூட்டர்: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பதிலாகநடப்பு நிதியாண்டு முதல்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிக்கு முன்னுரிமை அடிப்படையிலும்பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 ஸ்கூட்டர்கள் ரூ.கோடி செலவில் வழங்கப்படும்.

 திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று  அமைச்சர் செல்வி ராமஜெயம் வெளியிட்ட அறிவிப்பு:
அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகளில் இதுவரை ஆண்டுக்கு 490 விண்ணப்பங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித் தொகை பெறுவதற்கான பயனாளிகளின் எண்ணிக்கை உச்ச வரம்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இதன்மூலம் தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவி கிடைக்கும்.


சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் தங்கிப் படிக்கும்100 மாணவிகளுக்கு உயர் கல்வி பயில நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவித்தார்.
சமூக நலத்துறையின் சேவை இல்லங்கள், 27 அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கிப் படிக்கும் மாணவியரில் பெரும்பாலானோர் தமது வறிய நிலையின் காரணமாக 12-ம் வகுப்புக்குப் பிறகு கல்லூரி கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். இந்த மாணவிகளில் 100 பேருக்கு இளங்கலைப் பட்டப்படிப்புமருத்துவம்பொறியியல் போன்ற தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் பயில உதவும் வகையில் பட்டப்படிப்புக்கு ஒரு மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மிகாமலும்மருத்துவம்பொறியியல் பயிலும் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் நிதியுதவி வழங்கப்படும்.
 இந்தத் திட்டம் நடப்பாண்டில் ரூ.34 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
அதேபோல்ஆசிரியர் மற்றும் செவிலியர் பயிற்சி பெற விரும்பும் 100 மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.25 லட்சம் செலவிடப்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More