Wednesday, September 7, 2011

தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வந்த அல் உம்மா கைதி சிறையில் அடைப்பு


தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வந்த அல் உம்மா அமைப்பை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் மூசா என்ற தடா மூசா. அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த இவர் கோவை தொடர் வெடி குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 5 ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

மூசாவின் தாய் கடந்த 2ம் தேதி இறந்து விட்டார். தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் செல்ல அனுமதி கேட்டு மூசா சார்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தந்தி கொடுக்கப்பட்டது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் மனு விசாரணைக்கு வந்தது. தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 2 மணி நேரம் ( காலை 10 முதல் 12 மணிவரை) நீதிபதி அனுமதியளித்தார். 

இதையடுத்து பாளை மத்திய சிறையிலிருந்து மூசா நேற்று காலை 10 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் மேலப்பாளையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின் மீண்டும் அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.nellai.net..ibrahimpfi
இன்னாளில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவுன்

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More