Monday, September 12, 2011

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !



 
திருவுரு வாயிருந்தும்
தெரியாமல் தெரியவரும்
கருவூல மாகஉள்ளான் ஒருவன்--அவன்தான்
கருணையங் கடலான இறைவன்! (திருவுரு...)            1.
 
அண்டகோ ளங்களெல்லாம்
உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக்
கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்--அவன்தான்
அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு...)  2.
 
ஆதியின்றி அந்தமின்றி
அழியாத பெரும்பொருளாய்
நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் --அவன்தான்
வேதம்”குர் ஆன்”கொடுத்த இறைவன்!   (திருவுரு...)    3.
 
சூனியத்தி லேயிருந்து
சூட்சுமத்தைத் தோற்றுவிக்கும்
மாண்புமிகுந்த அல்லாஹ் ஒருவன் --அவன்தான்
வேண்டியதெல் லாம்கொடுக்கும் இறைவன்!(திருவுரு) 4.
 
பற்றிருக்கப் பற்றறுத்து
பற்றுக் கொண்டு வெற்றிபெறக்
கற்றுத்தரும் நபியளித்தான் ஒருவன் --அவன்தான்
எத்திசைக் கும்அதிபதியாம் இறைவன்!!(திருவுரு)          5.
 
                                   -----  ஏம்பல் தஜம்முல் முகம்மது

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More