Monday, September 12, 2011

அவளும் பெண்தானே



பரமக்குடியில் நடந்த கலவரத்தில்பெண் போலீஸ் டெய்சிமானபங்கம் செய்யப்பட்டார். ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்போலீசார் பற்றாக்குறையால்நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள்பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும்ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட்-கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்துராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர்-ரயில்கள்-ரத்து-செய்யப்பட்டன.
கலவரத்தில் பெண் போலீஸ் டெய்சி என்பவரின் சீருடையை கலவரக்காரர்கள் கிழித்து மானபங்கம் செய்தனர். இதனால்தப்பி ஓடிய அவர்அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சமடைந்தார். வீட்டிலிருந்தவர்கள் மாற்று உடை கொடுத்தனர். 

கைதிகளை, வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும் பெண் போலீசார், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கைதிகள் தங்களை, "சில்மிஷம்' செய்தாலும், முறைகேடாக நடந்து கொண்டாலும் கண்டுகொள்ள வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். "ரிமாண்ட்' காலம் முடிந்து அல்லது வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்ல, ஆயுதம் தாங்கிய போலீசார், பாதுகாப்புடன் அழைத்துச் செல்வர். இதற்காக, ஆயுதப்படை ஆண் போலீசார், "ஷிப்ட்' முறையில் நியமிக்கப்படுவர். கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த, அன்றைய தினம், காலை 8 மணிக்கு, போலீசார் சம்பந்தப்பட்ட சிறைக்கு வருவர். சிறை அதிகாரியிடம், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து, குற்றவாளிகளை அழைத்து செல்வர். நபர் ஒருவருக்கு இரண்டு போலீஸ், இரண்டு பேருக்கு மூன்று போலீஸ் என அழைத்து செல்வர்.
கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாலை 6 மணிக்குள் சிறைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தாமதம் ஏற்படும்பட்சத்தில், அதற்கான உரிய ஆதாரங்களை சிறையில் தாக்கல் செய்ய வேண்டும். கைதிகளை கோர்ட்டிற்கு அழைத்து செல்லும் பணியில் தற்போது அதிகளவில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். உதாரணத்திற்கு, தேனி சிறையில் இருந்து மதுரை கோர்ட்டிற்கு கைதி ஒருவரை அழைத்து வர,  இரண்டு பெண் போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, இவர்கள், வீட்டில் இருந்து அதிகாலையிலேயே கிளம்ப வேண்டியுள்ளது. நள்ளிரவில் வீடு திரும்பமுடிகிறது.

பஸ்சில் வரும்போது, மூன்று இருக்கைக்கு நடுவில் கைதியை அமர வைத்து, இருபுறமும் பெண் போலீசார் அமர்ந்து பயணிக்கின்றனர். வரும் வழியில், பெண் போலீசாரிடம் கைதி செய்யும், "சில்மிஷத்திற்கு' அளவே இல்லை. "சொன்னால் துக்கம்,  சொல்லா விட்டால் வெட்கம்' என்ற நிலையில்,  பெண் போலீசார் அமைதி காக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல மணி நேர பயணத்திற்கு பின் கோர்ட்டிற்கு வந்ததும், "சிறுநீர்' கழிக்க வேண்டும் என, கைதி கேட்பதும், கைவிலங்கிட்ட கைதியுடன் சென்று,  அவர்,  சிறுநீர் கழிக்கும் வரை திரும்பி நிற்பதும் வேதனைக்குரியது. சில கைதிகள்,  வேண்டுமென்றே முறைகேடாக நடந்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

கோர்ட் வளாகத்தில் கைதிகள் பீடி, சிகரெட் புகைப்பதும், அதை தடுக்க வழியின்றி, அவர்கள் அருகே, பரிதாபமாக துப்பாக்கியுடன் நிற்பதும் பெண் போலீசார் தினமும் அனுபவிக்கும் கொடுமை. கைதிகளை போலவே பெண் போலீசார் தங்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க இயலாது. கைதிகள் சில்மிஷம் செய்வது குறித்து உயரதிகாரிகளிடம் புகார் கூறலாம். ஆனால், புகாரை பதிவு செய்து,  கோர்ட்டில் வழக்கு நடத்த வேண்டும். ஏற்கனவே கைதிகளால் கொடுமை அனுபவித்து வரும் பெண் போலீசார்,  மீண்டும் பிரச்னையில் சிக்க தயாராக இல்லை. எனவே, தங்களுக்கு நேரிடும் கொடுமைகளை வெளியில் காட்டி கொள்ளாமல் மனதிற்குள்ளேயே அழுது புலம்புவதை தவிர வேறுவழியில்லை.

இதுபோன்ற பணிகளில் பெண் போலீசாரை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, எழுத்து வேலை, போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபடுத்தலாம். பெண் போலீசாரின் வேதனைகளையும், மனக்குமுறல்களையும்,   டி.ஜி.பி.,  தீர்க்க முன்வருவாரா?

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More